இசையமைப்பாளர் இல்லாமல் படமான கொட்டுக்காளி ரிலீஸ்
வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. 'எங்க விட்டு பிள்ளைக்கு பேய் புடிச்சுருக்கு.அதை விரட்டப் "போறோம்' என்கிற ஒரே ஒரு வசனம் மட்டுமே டிரைலரில் உள்ளது. மற்ற காட்சிகள் அனைத்தும் ஆரம்பம் முதல் இறுதிவரை சீரியஸாகவே நகர்கின்றன. படத்திற்கு இசையமைப்பாளர் என யாரும் இல்லை. படப்பிடிப்பு சூழலில் இருந்த ஒலியை மட்டும் பயன்படுத்தி உள்ளனர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்த படம் ஆக., 23ல் ரிலீஸாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் கொட்டுக்காளி. இந்தப்படத்தை கூழாங்கல் என்ற அற்புதமான படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். கொட்டுக்காளி திரைப்படத்தில் இசையமைப்பாளரே கிடையாதாம். எதார்த்தமான திரைப்படம் என்பதால் கதையோடு ரசிகர்களும் பயணிக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் இல்லாமல் படத்தை எடுப்போம் என்று இயக்குனர் சொன்னதாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்
0
Leave a Reply