பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி
2023 மார்ச்சில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 58 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். (100% தேர்ச்சி)
பள்ளியில் S. ஆதித்திர அய்யனார் 583/ 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவர் M. லக்ஷ்மண் 581/ 600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இயற்பியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவி M. லோச்சனா சிவப்பிரியா 577/ 600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், ஆங்கிலத்தில் நூற்றுக்கு 98 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
மேலும் மாணவர்கள் M. சிவரஞ்சனி, S. துவாரகேஷ் மற்றும் P. ரோஹித்ராம் கணிப்பொறி அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், வேதியியலில் C.விஷ்வா R.S.கௌசிகா மற்றும் M. சண்முக தர்ஷினி ஆகியோர் நூற்றுக்கு 99 மதிப்பெண்களையும், உயிரியல் பாடப்பிரிவில் மாணவி K.பிரதிக்ஷா நூற்றுக்கு 99 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 36 பேர் 75 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
0
Leave a Reply