25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச் சூழல் தினம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச் சூழல் தினம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச் சூழல் தினம் பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக திருமதி. R. விஜயலட்சுமி, Master NLP practitioner  அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். 

மேலும்,இன்றைய தினத்தின்  கருப்பொருள் 'Beat plastic pollution'என்ற வாசகத்தினை அனைவர் மனதிலும் பதிய வைத்தார்.

பள்ளித் தாளாளர் சிறப்பு விருந்தினரை கௌவரம் செய்து தனது உரையில் இந்த சுற்றுப்புற சூழலின் Motto Save the Earth, Save Yourselves,  Think Green,Be Green,Beat the plastic என்பதையும், மனச் சுழலையும், சுற்றுச் சூழலையும் சரி செய்வது அவசியம் என்பதையும் எடுத்துரைத்தார்.

சுற்றுச்சூழல் காப்போம்", Demerits of plastics என்பன பற்றி மாணவிகளும் , சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய உரையை தமிழாசிரியையும் எடுத்துக் கூறினர்.  சேர்ந்திசைப் பாடல் மூலமாக மாணவிகள் இயற்கையைக் காப்போம் என்ற விழிப்புணர்வுப் பாடலையும் பாடினர்.

 சிறப்பு விருந்தினர் தமது உரையில் If I can't help myself, how can I help others? என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் சுற்றுப்புறச் சூழலை எப்படி,  எதைச் செய்வதன் மூலம் பாதுகாக்கலாம் என்று மாணவர்களிடையே உரையாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உரையாடலில் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி  நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி. ரமணி சந்திரசேகர் ராஜா மற்றும் திருமதி. ரம்யா மோகனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News