25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Jun 15, 2023

வெயிலால் உங்க முகம் கறுத்துபோகாமல் இருக்க.......

தக்காளி கூழ் ஃபேஸ் பேக் -தக்காளி அதன் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகளுக்காக அறியப்படுகிறது. இது உங்கள் கருப்பு மற்றும் பழுப்பு தோற்றத்தை குறைக்க உதவுகிறது. ஏனென்றால், தக்காளியில் லைகோபீன் உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. லைகோபீன் தோலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதால், கருமையான தோற்றத்தை குறைக்க உதவுகிறது. எப்படி செய்வது: ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி தக்காளி கூழுடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.சன் டானுக்கு வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் வெள்ளரி அவற்றின் இயற்கையான குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்காக அறியப்படுகிறது. இவை எண்ணெய் சருமத்திற்கு சிறந்தது. வெள்ளரிகளில் இயற்கையான அஸ்ட்ரிஜென்ட்கள் உள்ளன, அவை எண்ணெயைக் குறைக்கவும், அதிகப்படியான சருமத்தை அகற்றவும் உதவுகின்றன. எப்படி செய்வது: 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் கூழ், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இறுதிக் குறிப்பு இந்த ஃபேஸ் பேக்குகள் சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சிறந்தவை மற்றும் உங்கள் எண்ணெய் சருமத்தை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் மாற்றும். சிறந்த முடிவுகளைப் பெற இந்த ஃபேஸ் பேக்குகளை தவறாமல் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள். கூடுதலாக, நீங்கள் கற்றாழை ஜெல் அல்லது குளிரூட்டும் கிரீம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். இது சரும வீக்கத்தைக் குறைத்து குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவலாம். உங்கள் நிறம் மாறாமல் இருக்க, வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது நிலமையை மோசமாக்கும் மற்றும் குணப்படுத்துவதை கடினமாக்கும்.

Jun 14, 2023

இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்

 கொளுத்தும் கோடை வெயில், உங்கள் சரும நிறத்தை பாதித்து, கருப்பாக அல்லது பழுப்பு நிறமாக மாற்றும். இது சன் டான் என்று அழைக்கப்படுகிறது.கோடைகாலத்தில் கொளுத்தும் சூரிய வெப்பத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டியது முக்கியம். முகத்தில் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவும். நாம் ஒவ்வொருவரும் நம் சருமம் அழகாக பளபளப்பாக ஜொலிக்க வேண்டும் என்று விரும்புவோம், உங்கள் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சரியான வழியாகும். எண்ணெய் பசை சருமம் இருந்தால், உங்கள் சருமத்துளைகளை அடைக்காத மற்றும் உங்கள் சருமத்தை எரிச்சலூட்டாத அல்லது உலர்த்தாத பொருட்களைக் கொண்ட ஃபேஸ் பேக்குகளைக் கண்டறிவது அவசியம். ஃபேஸ் பேக்குகள் சருமத்தை மென்மையாக்கவும் ஹைட்ரேட் செய்யவும் மற்றும் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சவும் உதவுகின்றன.அவை இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவை தோலில் இருந்து அசுத்தங்கள் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன, மேலும் பளபளப்பாக தோற்றமளிக்கவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது. உங்கள் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சரியான வழியாகும். நம் சருமம் அழகாக பளபளப்பாக ஜொலிக்க வேண்டும் என்று விரும்புவோம். தேன் மற்றும் பப்பாளி மாஸ்க் தேன் மற்றும் பப்பாளி பேஸ் மாஸ்க்கில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன மற்றும் தோல் பதனிடுதலைக் குறைக்கவும், தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. தேன் மற்றும் பப்பாளியில் உள்ள நொதிகள் இறந்த சரும செல்களை உடைக்க உதவுகின்றன, இது சருமத்தை ஒளிரச் செய்து தோல் பதனிடுவதை குறைக்க உதவுகிறது.நாம் ஒவ்வொருவரும் நம் சருமம் அழகாக பளபளப்பாக ஜொலிக்க வேண்டும் என்று விரும்புவோம்.: ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் தேன், ¼ கப் மசித்த பப்பாளி கூழ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து ஒன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதற்கான பலனை நீங்களே காணலாம். 

Jun 13, 2023

ஈறுகளின் இரத்தக் கசிவு குறைய

ஆமணக்கு எண்ணெயில் ஒரு கட்டி கற்பூரம் கலந்து ஈறுகளில் மசாஜ் செய்து வந்தால் ஈறுகள் பலவீனமாக இருந்தால் உறுதியளிக்கும் .மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஈறுகளில் தேய்த்து மசாஜ் செய்தாலும் கிருமிகள் அழிந்துவிடும்தேங்காய் எண்ணெய் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் .இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் செய்து வந்தாலே ஈறுகளின் இரத்தக் கசிவு குறையும் அதோடு உங்களுக்கு வாய் துர்நாற்றம் இருந்தாலும் நீங்கும்.

Jun 12, 2023

பல் வலி குணமாக....

இலவங்கம் ,ஓமம் இரண்டையும் பொடி செய்து சிறிது கற்பூரம் சேர்த்து வலி உள்ள இடத்தில் வைத்து...10 நிமிடம் கழித்து வெந்நீரில் வாய் கொப்பளித்து வரகுணமாகும்... ஓமத்தை இடித்து பொடி செய்து பல் வலி உள்ள இடத்தில் வைத்து வந்தால் உடனே குணமாகும்...இலவங்க எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு வலி உள்ள இடத்தில் சில சொட்டு விட்டு வர  குணமாகும்....நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாகநறுக்கி... தேன் ஏலக்காய் ரோஜா இதழ்கள்சேர்த்து...நன்றாக கலந்து... இரண்டு நாட்கள் வெயிலில்காய வைக்க வேண்டும்... ஒரு ஸ்பூன் வீதம்... காலை மாலை சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன்வாழலாம்... 40 வயதை கடந்தவர்கள் தினமும் இதைசாப்பிட்டு வரலாம்

Jun 05, 2023

நரைமுடி

நரைமுடி மறைய வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தடவையோ அல்லது இரவு தூங்குவதற்கு முன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை எடுத்து தலைக்கு அலசியோ வந்தால் நாளடைவில் நரைமுடி கருமையாக மாறும். உதிர்ந்த முடி மீண்டும் வளர வெங்காயம் சாறு உதவுகிறதுரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில்இரண்டையும் கலந்து வாரத்தில்  இரண்டு நாட்கள் தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் நரைமுடி கருப்பாக மாறும்.மருதாணி இலை,வேப்பங்கொழுந்து, நெல்லிக்காய் மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்துக் கொள்ளவும். இரவு நேரத்தில் முடியின் வேர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நரை முடி மறைந்து நன்கு கரு கருவென மாறிவிடும்.

May 31, 2023

ஸ்டிக்கர்ப் பொட்டு வைக்கும் இடம்

ஸ்டிக்கர்ப் பொட்டு வைக்கும் இடம் கறுப்பாக இருந்தால்,துளசியையும், தேங்காயையும் சேர்த்து அரைத்து அதன் சாறை தினமும் தடவினால், கறுப்பு நிறம் மாறிவிடும்.பேரீச்சம்பழம் இரும்புச்சத்துக் கொண்டது. உடலுக்கு வலிமை ஊட்டக்கூடியது. ஆனால் இதை சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் பால் அருந்தினால் தான் முழுமையான பலன் கிடைக்கும்.பீன்ஸில் பாஸ்பரஸ் சத்து நிறைந்திருப்பதால் மூளைப் பலத்திற்கு மிகவும் நல்லது. மன நோயாளிக்கு நாளும் கொடுக்க வேண்டிய நல்ல காய்பீன்ஸாகும்.தேநீரில் சத்துள்ள ஃப்ளோரைடு அதிக அளவில் உள்ளது.இதனால் டீசாப்பிடுவோருக்கு அதிகம் பல் சொத்தை ஏற்படுவதில்லை என்று மேற்கு ஜெர்மனியின் பல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித் துள்ளார்கள்.

May 29, 2023

முகத்தில் உள்ள கருமை நீங்க....

 பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடத்திற்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.

May 27, 2023

இளநரை போக கடுக்காய்

தேவையானவை :- - கடுக்காய் பவுடர் - ஆம்லா பவுடர் -நல்லெண்ணெய் - கருவேப்பிலை பவுடர் செய்முறை :- 1 டீஸ்பூன் கடுக்காய், 2 டீஸ்பூன் ஆம்லா பவுடர், 1 டீஸ்பூன் கருவேப்பிலை பவுடர் ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுத்து 4 டீஸ்பூன் நல்லெண்ணெய்யை எடுத்து கொண்டு அதனை லேசாக சூடு செய்து, இந்த மூன்று பவுடரையும் அதனுள் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்ட் தேய்த்து கொண்டு தலைக்கு குளித்தால் இளநரைகள் ஓடி போய்விடும். அதோடு சேர்த்து முடியும் கருகருவென வளர ஆரம்பித்து விடும்.

May 26, 2023

கண்களின் கருவளையம் நீங்க

பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடிபோட்டுக் கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். இதற்கு காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது.சோற்றுக்கற்றாழை இலை ஜெல்லுடன் பப்பாளி கூழை கலந்து கொள்ளவும், இதை கழுத்து மற்றும் முகத்தில் பூசி நன்றாக தேய்க்கவும்,பின்காய்ந்ததும் தண்ணீரில் கழுவும். வாரம் இரண்டு முரை இப்படி செய்தால் கருப்பு புள்ளிகள் மறையும். பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,கரும்புள்ளி ஆகியவை மறையும்.அரை டீஸ்பூன் பப்பாளி சாறு, அரை டீஸ்பூன் ஆலுவேரா ஜெல், ஒரு விட்டமின் ஈ கேப்சூல் இது மூன்றையும் . ஒன்றாக கலந்து கண்களை சுற்றி உள்ள கருவளையம் மீது தினமும் தேய்த்து வந்தால் விரைவிலே கண்களின் கருவளையம் நீங்கிவிடும்.ஒரு டீஸ்பூன் பப்பாளி பழ சாறு, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு இவை இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் ஒரு பத்து நிமிடம் ஸ்க்ரப் செய்து, பின்பு முகத்தை அலம்பி விடுங்கள். இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறி விடும். (பப்பாளியை தோல் சீவி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்தால் பப்பாளி சாறு கிடைக்கும். அப்படி இல்லை என்றால் அரைத்த பப்பாளி விழுவதோடு அரிசி மாவை சேர்த்து முகத்தில் போடலாம்.)

May 24, 2023

பல் வலி தீர மாசிக்காய் தைலம்

பல் போனால் சொல் போச்சு என்பார்கள். முதலில் பல் வலியில் ஆரம்பித்து பின்பு பற்களையே இழக்க நேரிடும். இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.மாசிக்காய் தீராத பல் வலி மற்றும் பல் அசைவு போன்ற பல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும். பல் பிணியை நீக்கும் மாசிக்காய்த் தைலம் தயாரிக்கதேவையான மூலிகைகள் - மாசிக்காய் -5 கிராம் , கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம் , நல்லெண்ணெய் - 100 மிலிமாசிக்காய், கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் நன்றாக இடித்து நல்லெண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி, எடுத்து வடிகட்டி வைத்துக்கொண்டு , பல் வலிக்கும், பல் அசைவுக்கும் பல் ஈறுகளிலும் தடவி வர தீரும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News