25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கைகளில் அதிகளவில் சுருக்கங்கள் இருந்தால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கைகளில் அதிகளவில் சுருக்கங்கள் இருந்தால்

வயதாகிக்கொண்டு இருந்தாலே அதிகளவில் கைகள் மற்றும் முகங்களில் சுருக்கங்கள் வர ஆரம்பித்து விடும்.. ஆனால் ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கியதைப் போன்று தோற்றமளிக்கும்.இது பல காரணங்களால் ஏற்படும். நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவையால்கூடஏற்படும்.சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது இல்லை. ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து சருமத்தில் உள்ள சுருக்கத்தை போக்கலாம். 

ஒரு கப்பில்3,4 ஸ்பூன் சர்க்கரையும்,2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.பின் நன்றாக கழுவிவிட்டு இந்த கலவையை தடவி5நிமிடம் மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர தோலில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.பாத்திரத்தில்1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.  

இந்த கலவையில் 15- 20 நிமிடங்களுக்கு கைகளில் தடவி,1520 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4-5 முறை செய்துவர நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்து எடுத்துக்கொள்ளவும். பின் கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை செய்து வர நல்ல மாற்றத்தை தோலில் பார்க்கலாம்.  

தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயை வைத்து கைகளில் மசாஜ் செய்யவும். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்ய நல்ல மாற்றத்தை பார்க்கலாம். வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்து கொள்ளவும். அதை கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கமானது குறைய ஆரம்பிக்கும்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News