விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தில் கால்நடைசிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S ., அவர்கள் (11.06.2025) தொடங்கி வைத்து, கால்நடைகளுக்கு நோய்தடுப்பு மருந்தினை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2025-2026 -ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 12 முகாம்கள் வீதம் மொத்தம் 132 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இம்முகாமில், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை ஆய்வு, கருப்பை மருத்துவ சிகிச்சைகள் போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி, இன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்pனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இம்முகாமில், 110 கால்நடைகளுக்கு சிகிச்சைகளும், 912 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளும், 11 கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கரூவூட்டலும் மற்றும் 7 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், 202 கால்நடைகளுக்கு தடுப்பூசிகளும் என மொத்தம் 1242 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது.பின்னர், 3 பயனாளிகளுக்கு கிபேரி கன்றுகள், 4 பயனாளிகளுக்கு இலவச கோ -4 புல்கரணைகள், மற்றும் 3 பயனாளிகளுக்கு மேலாண்மை முறையில் சிறந்த கால்நடை வளர்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றிய சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளையும், சிறந்த கிடேரி கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகளையும், விவசாயிகளுக்கு கால்நடை தீவனபயிர்களையும், கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவை மற்றும் சத்து பவுடர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எட்வின் ஜேம்ஸ் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply