சீயக்காய் தூள்
கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் தூள் போட்டு தலைக்கு குளித்து வரலாம்.சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால்கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும். சீயக்காயில் பி.எச்.அளவு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தும் போதுகூந்தல் மிருதுவாக மாறும் .கூந்தலை வறட்சியாக்காது.
தலைமுடியில் அழுக்குப்படிந்து சிக்கு ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது தேய்த்து வெந்நீரில் குளிக்க சிக்குகள் விலகி முடி மென்மை பெறும். தலைமுதல் கால்வரை அழுக்குகளை நீக்கிக் சுத்தப்படுத்தும் சீயக்காய், இயற்கை தந்த இனிய ஷாம்பூ ஆகும்.
சீயக்காய் தூள் தயாரிக்கும் முறை : நென்னாரி வேர் - 1 பிடி ,சந்தன சக்கை - 1 பிடி ,ரோஜா மொக்கு - 5 பிடி (உலர்ந்தது) ,ஆவாரம்பூ - 5 பிடி(உலர்ந்தது) ,பச்சை பயறு - 2 பிடி ,வெந்தயம் - அரை பிடி ,சீயக்காய் - 1 கிலோ
இவற்றை ஒருநாள் வெயிலில் உலர்த்திப் பின் மிஷனில் அரைத்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தித் தினசரி குளிக்கும்போது பயன்படுத்தலாம். சீயக்காய், ஷாம்பூபோல் நுரை வரவேண்டும் என்றால், அதனுடன் பூவந்திக் கொட்டையின் தோலினை 2 பிடி உலர்த்தி சேர்த்து அரைத்தால் ஷாம்பூபோல் நுரை வரும். இதனை சீயக்காய் தூளுடன் சேர்த்தும் உபயோகப்படுத்தலாம்.இவை யாவும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.
0
Leave a Reply