25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


ஆரோக்கியம்

May 04, 2026

தூக்கத்துக்கு சீரகம்.

சில காரணங்களால் சில பேர் தூக்கம் வராம தவியா தவிப்பாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, ராத்திரி9 மணிக்கு முன்னாடி சாப்பிட்டா பயன் கிடைக்கும். வெங்காயம் பிடிக்காது, நெய் சேர்க்கமாட்டேன்'னு சொல்றவங்க. சீரகத்தை இளவறுப்பா வறுத்துப் பொடி பண்ணி, வாழைப்பழத்தோட சேர்த்து சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்.அஜீரணத்தை போக்கும். வயிற்று வலிக்கு தீர்வு தரும். மிளகு, சீரகம் இரண்டையும் சமஅளவு சேர்த்து பொடித்து வைத்துக்கொண்டு வெருகடி அளவு தேனில்குழைத்தோ அல்லது வெந்நீருடனோ சேர்த்துவாப்பிடஅஜீரணத்தால்ஏற்பட்டகடுமையானவயிற்றுவலி,பித்த மயக்கம், அரோசகம் (உணவின் மீது வெறுப்பு) ஆகியவை போகும்.சீரகத்தை அரைத்து ஒரு கரண்டி அளவு எடுத்து எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க கர்ப்பிணிகளுக்குத்துன்பம் தரும் வாந்தி குணமாகும். ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிடி) அதிகமானதால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகத்தை வாயிலிட்டு மென்று அதன்சாற்றை விழுங்க உடனே பலன் கிடைக்கும். சீரகம், இந்துப்பு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து மையஅரைத்து அத்துடன் சிறிது நெய்விட்டுச் சூடாக்கித் தேனீ கொட்டிய இடத்தில் பூசி வைக்க நஞ்சு இறங்கி வலி மறையும்.சீரகப் பொடியோடு கற்கண்டு தூள் சேர்த்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர குத்திருமல், வறட்டு இருமல் என வரும் எந்த இருமலும் தணியும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் குழைத்துக் கொடுக்க அல்சர் வயிற்று உபாதை குணமாகும்.

May 02, 2026

பொட்டுக்கடலை சாப்பிடுவதால்....

பொட்டுக்கடலையில்  உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது. கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச்சத்து அதிகம். நமது பெருங்குடல் ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது. வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, சி, டி, ஈ, கே போன்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளன. இரத்த சர்க்கரை அளவை உறுதிபடுத்துகிறது.பொட்டுக்கடலையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து (Protein) அதிகமாகவும் உள்ளதால், இது செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் பசி கட்டுப்பட்டு, உடல் எடை குறைக்க உதவுகிறது.இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆரோக்கியமான கொழுப்பின் அளவை ஊக்குவித்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும், நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஆற்றலை வழங்கவும் இது உதவுகிறது.இதில் உள்ள செலினியம் டிஎன்ஏ சேதத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் அளிக்கவும் இது உதவுகிறது.புரோட்டீன் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கும், வலுவான நகங்களுக்கும், ஆரோக்கியமான சருமத்திற்கும் இது சிறந்தது.இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் எலும்புகள் மற்றும் நரம்புகளை வலுப்படுத்தி, மூட்டு வலியைத் தடுக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி அப்படியே சாப்பிடலாம்.வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடுவது இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் அளவை அதிகரிக்கும்.சாலடுகள், சாட்கள் மற்றும் சூப்களில் சேர்த்து சாப்பிடலாம். 

May 01, 2026

குழந்தைகளின் ரத்தத்தை  அதிகரிக்கும் உணவுகள்.

பச்சை காய்கறிகள் + இரத்த அணுக்கள் உற்பத்திபரிமாறும் முறை: பாசிப்பயறு, சப்பாத்தி, ஆம்லெட்டில் சேர்க்கவும்.எள் + இரத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.வழங்கும் முறை: நல்லெண்ணெய் லட்டு, நல்லெண்ணெய் தூள்.உலர் திராட்சை -ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.கொடுக்கும் முறை: ஊறவைத்த உலர் திராட்சை சிற்றுண்டியாகக் கொடுக்கலாம்.முட்டை + இரத்த அணுக்கள் உற்பத்தி.பரிமாறும் முறை: வேகவைத்த முட்டை, ஆம்லெட்.கொட்டைகள்-  இரும்புச்சத்து, ஆற்றல் தரும் மாவுச்சத்துக்களைக் கொண்டுள்ளது.பரிமாறும் முறை: காய்கறி பஜ்ஜி, உப்புமா.வைட்டமின் சி உணவு- ஆரஞ்சு, எலுமிச்சை,பப்பாளி, குடைமிளகாய் இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. 

Apr 30, 2026

சத்து நிறைந்த கேரட்

மத்திய ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீகப் பகுதியான ஈரானில்,10ம் நுாற்றாண்டில், முதன்முதலில் கேரட் அறிமுகமானது. அங்கிருந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என, உலகெங்கிலும் பரவியது.ஆரம்பத்தில் ஊதா, மஞ்சள், வெள்ளை நிறத்திலேயே கேரட்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள விவசாயிகள், 16ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்திய ஆரஞ்சு நிற கேரட்கள், தற்போது உலகம் முழுவதும் பரவலான புழக்கத்தில் உள்ளன.கேரட்டில், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, கே,நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. கண் பார்வை, தோல், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கேரட் உதவுகிறது. குறைந்த கலோரி, கொழுப்பு இருப்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மாலைக்கண் நோயை குணப்படுத்தும் மாமருந்தெனவும் போற்றப்படுகிறது.கேரட்டில் அதிக அளவு பீட்டா-கரோட்டின் (Beta-carotene) மற்றும் வைட்டமின் A உள்ளது, இது மாலைக்கண் நோய் வராமல் தடுத்து, கண்பார்வையை கூர்மையாக்குகிறது.கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும், இளமையுடன் இருக்கவும் உதவுகின்றன.கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தத்தை (Blood Pressure) சீராக வைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.நார்ச்சத்து (Fiber) அதிகமாக இருப்பதால், செரிமான கோளாறுகளை சரிசெய்து, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக கேரட் பயன்படுகிறது.கேரட்டில் உள்ள வைட்டமின் C மற்றும் பிற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. கேரட் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து இரவு பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது, தினமும் கேரட்டை தவறாமல் சாப்பிட்டால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் வைட்டமின் சி எலும்புகளை வலுவாக்கும்.இதில் அதிகளவில் பொட்டாசியம் நார்ச்சத்து உள்ளன மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.கேரட் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் வாயுத்தொல்லை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.சாலட், சூப், அல்வா, கேக் மற்றும் புட்டிங் போன்ற பல உணவு வகைகளில்கேரட் பயன்படுத்தப்படுகிறது.

Apr 29, 2026

வெறுங்கால் நடை நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் .

வெறுங்கால் நடை ,இயற்கையான ஒரு மனிதனின் நடையை மீட்டெடுத்து, கால் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுவதுடன், இடுப்பு, முழங்கால்கள் இலகுவாக இயங்க உதவுகிறது என்றும் கூறுகின்றனர்.நிலத்தில் காலணி இன்றி வெறுங்கால்களால் நடப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என உலகின் பல நாடுகளிலும் 'பேர்புட் வாக்கிங்' பழக்கத்தை பலரும் கடைப் பிடிக்க தொடங்கி உள்ளனர்.மனித உடலில் லேசான நேர்மறை மின்னூட்டம் உள்ளது. நமது செல்கள் மின் தூண்டுதல்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகின்றன. நரம்பு மண்டலம் உடல் முழுவதும் மற்றும் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்ப மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் நாம் சிந்திக்கவும், நகரவும், உணரவும் முடியும். ஓய்வெடுக்கும் செல்கள் உட்புறமாக எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், வெளிப்புற செல் சூழல் நேர்மறையாக மின்னூட்டம் ,இதன் பின்னணியில் ஒரு எளிய அறிவியல் உள்ளது என் றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமி ஒரு எதிர்மறை மின்னூட்டம் என்ற நெகடிவ் மின்னூட்டம் கொண்டுள்ளது.மனிதனின் கால்கள் நிலத்தில் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தும் போது, பூமியை அழுத்துவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான நேர்மறை மின்னூட்டம் சமநிலை அடைந்து உடலில் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆய்வுகளில் நிலத்தில் வெறுங்கால்களால் நடப்பதன் மூலம், மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறைந்து, உடல் ஆற்றல் அதிகரிக்கிறது என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. காலணிகள் இன்றி நிலத்தில் நடப்பது பல்வேறு கிருமிகள் உடலில் தொற்றி உடல் நலனை பாதிக்கும் என்றும் பல்வேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இயற்கை மருத்துவர்கள் புல் தரை, மணல் ஆகியவற்றில் நடப்பது கூடுதல் பலன்களை அளிக்கிறது. இது நம்மை பூமியுடன் மின்சாரம் மூலம் மீண்டும் இணைக்கும் ஒரு சிகிச்சை நுட்பம் என்றும் கூறுகின்றனர்.

Apr 28, 2026

சிறுநீரகங்களில் கற்களை சேர விடாமல் தடுக்கும் செவ்வாழை.

செவ்வாழை கண்கள் அத்தனை சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் நீக்குகிறது.செவ்வாழையில், வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச்சத்து. பொட்டாஷியம் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துகள் உள்ளன. இதனால், சிறுநீரகங்களில் கற்களை சேர விடாமல் தடுக்கிறது.நம்மிடமேசெவ்வாழை, ரத்தஅழுத்தத்தைகட்டுப்படுத்துகிறது.இதனால்,இதயநோய்களைஎளிதில்நம்மிடம்அண்டவிடுவதில்லை. நுரையீரல், கல்லீரல், இதயம், குடல்போன்றமுக்கியஉடலுறுப்புகளின்செயல்பாட்டிற்கு, செவ்வாழை உதவுகிறது. நம்முடைய குடலில், நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை, 10 மடங்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மலச்சிக்கலை போக்கக்கூடியது உடல் எடை சீராக வைக்கவும் உதவுகிறது.செவ்வாழையை சிறிதாக நறுக்கி, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலே, கண்களிலுள்ள உஷ்ணம் நீங்கி விடும். அதேபோல, மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர்கள், இரவு உணவிற்கு பின், தொடர்ந்து, 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தாலேநிவாரணம் கிடைக்கும்.தினமும், ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட தோல் பிரச்னைகள் தீரும்.வாரம் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தொற்று நோய் பாதிப்புகளும் தீரும், அந்த அளவுக்கு கிருமிகளை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி, செவ்வாழைக்கு உள்ளது.ஒரு நாளைக்கு, இரண்டு செவ்வாழை வீதம், 48 நாட்கள் சாப்பிட்டு வர, ஆண்மைக் கோளாறுகள் நீங்கி விடும்.செவ்வாழையில், கால்ஷியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், பற்களுக்கு மிகவும் வலு தருகிறது. பலவீனமான பற்கள் இருந்தாலோ அல்லது பல் ஆடுவது போல இருந்தாலோ, ஈறுகள் பலவீனமாக இருந்தாலோ, அத்தனைக்கும் செவ்வாழை மருந்தாகிறது. எனவே, தொடர்ந்து, 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்முற்றிலும் தீரும்.வாழைப்பழத்தில் பொட்டாஷியம் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுத்து விடுகிறது. ஏற்கனவே, சிறுநீரக கற்கள் பிரச்னை இருப்பவர்களும் செவ்வாழையை வாரம், இரண்டு முறை சாப்பிடுவது நல்லது.

Apr 27, 2026

வைட்டமின் அதிகமாக இருக்கும் கத்திரிக்காய்..

கத்திரிக்காயில் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கிறது.கத்திரிக்காய் கருப்பு, ஊதா, வெள்ளை என பல நிறங்களிலும் கடைகளில் கிடைக்கிறது. அதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியிருக்கிறது.வைட்டமின்C,வைட்டமின்A,வைட்டமின்E, வைட்டமின்K மற்றும் வைட்டமின்B காம்ப்ளக்ஸ் போன்றவை உள்ளன.கத்திரிக்காயில் வைட்டமின் அதிகமாக இருக்கும் காரணத்தால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினை போக்கும்.இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (Polyphenols) உள்ளன, இது செல்களின் சேதத்தைத் தடுக்கிறது.பிஞ்சு கத்திரிக்காய் சாப்பிட்டால் வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய், சளி, கீழ்வாதம், பித்தம், மலச்சிக்கல், தொண்டைக்கட்டு, உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் போக்கும்.கத்திரிக்காயில் வைட்டமின் பி அதிக அளவு உள்ளதால் நாம் உண்ணும் உணவு விரைவாகவே சத்தாக மாற அது உதவுகிறது.பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன.இதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.உடலில் அரிப்பு ஏற்படும் என்பதற்காக முத்திய கத்திரிக்காயை முற்றிலுமாகவே தவிர்க்க முடியாது ஏனெனில் முத்திய கத்திரிக்காயில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் உடலின் வளர்ச்சிக்கு அது பயன்படும்.கத்திரிக்காய் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.இரத்தஅழுத்தத்தைசீராகவைத்து,இதயநோய்அபாயத்தைக்குறைக்கஉதவுகிறது.அதேநேரம் உடலில் சொறி சிரங்கு புண் உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.அதேபோல் கத்தரிக்காய் வற்றல் சாப்பிட்டால் உடம்பு சூடாகும். மேலும், கத்திரிக்காய் சாப்பிட்டால் உடலில் அரிப்பு ஏற்படும் என பலரும் நினைக்கிறார்கள்.உண்மையில் முத்திய பெரிய கத்திரிக்காய் சாப்பிட்டால் மட்டுமே அந்த பிரச்சினை வரும்.பிஞ்சு கத்தரிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு நன்மையே தரும்.

Apr 25, 2026

சர்க்கரை நோயை இயற்கை வாழ்வியல் ரீதியாக நாம் சரி செய்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல, உடலில் நாம் செய்யும் வாழ்வியல் தவறினால் இன்சுலின் சுரப்பதில் சில மாற்றங்கள் நிகழும் அதை நம் உணவின் ரீதியாக இயற்கை வாழ்வியல் ரீதியாக சரி செய்து கொள்ளலாம்.மருந்து, மாத்திரைகள் எடுக்கும் போது காலத்திற்கும் அது உடலில் நோயாக மாறுகிறது. இதுவே மறைக்கப்பட்ட உண்மை.மருந்து, மாத்திரை,ஊசி தேவையில்லை, தினமும் அருகம்புல் சாருடன் மூன்று மிளகு சேர்த்து,48 நாட்கள் குடித்து வந்தால், சர்க்கரை நோய் முழுவதுமாக குணமாகிவிடும்.இதனுடன் ஆவாரம் பூ தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு வேலை குடிக்கவும்.காலையில் இஞ்சி(தோல் நீக்கவும்), மதியம் சாப்பாடு வடித்த கஞ்சியில் ஒரு ஸ்பூன் சுக்கு பொடி, மாலை வெந்நீரில் கடுக்காய் தூள் எடுத்துக்கொள்ளவும்.

Apr 24, 2026

நீண்ட நடை ,நீண்ட ஆயுள்.

ஒரு நாளில் 5-10 நிமிடங்கள் நடந்து நிறுத்துவதை விட ஒரே நேரத்தில் தொடர்ந்து நடப்பது தான் உங்கள் உடலுக்குஉண்மையான பலன் தருகிறது.தொடர்ந்து நடக்கும் போது இதயம் சீராகவும்,வலுவாகவும் வேலை செய்யும்.தசைகள் உறுதியாகும் .ரத்த ஓட்டம் மேம்படும்.இடைவிடாத நடை, இதய நோய் அபாயத்தை குறைக்கும்.திடீர் மரண ஆபத்தை குறைக்கும்.உடலுக்கு உண்மையானகார்டியோ பயிற்சி கிடைக்கும்.சின்ன சின்ன நடைகள் உடலை அசைக்குமே தவிர,உடலை மாற்றாது.இன்று முதல் 30-40 நிமிடம் இடைவிடாது தொடர்ந்து நடக்க,  உங்கள் நடை உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கும்.

Apr 22, 2026

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

கோடை காலங்களில் உடலில் உஷ்ணம் சேர்த்து விடும். அதனால் நீர்ச்சத்து குறைத்துவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பது, இளநீர் குடிப்பது மோர் சாப்பிடுவது, எறுமிச்சை சாறு தர்பூசணி, வெள்ளரிக்காய்  ஆகியவற்றை சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்கும்.வெயில் காலத்தில் சிவருக்கு மஞ்சள் காமாலை நோய் வர வாய்ப்புண்டு.எனவே அதை தவிர்ப்பதற்காக காய்ச்சிய நீரை பருகலாம்.வெயில் காலத்தில் பலருக்கும் சரும் நோய்கள் வரும். எனவே அதை தவிர்பதற்காக மெல்லிய  பருத்தி ஆடைகளை அணியலாம்.கோடை காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால் சமைத்தவுடன் சாப்பிடுவது நல்லது.வெயில் காலங்களில் கண் தொடர்பான நோய்கள் நிறைய வரும். எனவே  குளிர்ந்த நீரில் கண்களை கழுவு வேண்டும். அதேபோல் வெயிலில் செல்ல நேரிடும் போது சன் கிளாஸ் அணியலாம்.அதேபோல் , மதியம் 12 மணி முதல் 3  மணி வரை வெயிலின் தாக்கம் இருந்தால் அந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 31 32

AD's