25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரோக்கியம்

May 22, 2026

பாதங்களில் கருப்பு நூல் கட்டுவது.

பாதங்களில் கருப்பு நூல் கட்டுவது என்பது கண் திருஷ்டியைத் தடுப்பதற்கான ஒரு தந்திரம் மட்டுமல்ல; அதற்குப் பின்னால் ஒரு ஆழமான அறிவியல் உள்ளது! உண்மையில், கருப்பு நிறம் வெப்பத்தை உறிஞ்சி, உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கிறது. அதுமட்டுமின்றி, உங்கள் கணுக்காலில் கட்டப்படும் அந்த நூல், அக்குபிரஷர் புள்ளிகளில் மென்மையான அழுத்தத்தை அளித்து, இரத்த ஓட்டத்தைமேம்படுத்தி, பாத வலியையும் நீக்குகிறது!

May 22, 2026

உட்செலுத்தப்பட்ட நீரின் நன்மைகள்.

தூக்கம் சரியில்லையா -  நட்சத்திர சோம்பு தண்ணீர் 'குடிக்கவும். நீரிழப்பு - சியா விதை தண்ணீர் குடிக்கவும். தொண்டை வலியா - கிராம்பு தண்ணீர் குடிக்கவும். வாய் துர்நாற்றமா -  புதினா தண்ணீர் குடிக்கவும். தைராய்டு - கொத்தமல்லி விதை தண்ணீர் குடிக்கவும். வயிறு உப்புசமா -  ஏலக்காய் தண்ணீர் குடிக்கவும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா?-  கருப்பு திராட்சை தண்ணீர் குடிக்கவும். இரத்தத்தில் அதிக சர்க்கரை உள்ளதா? -  இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கவும்

May 21, 2026

நல்ல தூக்கத்திற்கு அவசியமான பழக்கங்கள்.

தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது உடல் கடிகாரத்தை சீராக்கும். தூக்கத்திற்கு முன் மொபைல் மற்றும் திரை பயன்பாட்டை குறைக்க வேண்டும். இரவில் லேசான உணவு எடுத்தால் தூக்கம் சீராக வரும். காபி மற்றும் தேநீர் இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். அமைதியான மற்றும் இருட்டான சூழல் நல்ல தூக்கத்திற்கு உதவும். தினசரி லேசான உடற்பயிற்சி தூக்க தரத்தை மேம்படுத்தும். மனஅழுத்தத்தை குறைத்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

May 20, 2026

மூளையை ‘ரீசெட்' செய்ய....

.எப்போதும் போனும் கையுமாகத் தலைகுனிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனிதர்களுக்கு, டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளனர். தொடர்ந்து சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால், பலருக்குக் கவனச்சிதறல் (Focus) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெறும் 2 வாரங்கள் மட்டும் இன்டர்நெட் பயன்பாட்டை முழுமையாக நிறுத்தினால், மூளை புத்துணர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே செயல்திறனையும் ஆற்றலையும் மீண்டும் பெறும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.டிஜிட்டல் உலகத்திலிருந்து,சற்றுவிலகிஇருப்பதுஉங்கள்மூளையை ‘ரீசெட்' செய்ய உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்

May 19, 2026

தூக்கத்தில் குறட்டை .

தூக்கத்தில் குறட்டை என்பது ஆழ்ந்த தூக்கத்தின் அறிகுறி அல்ல. அது சுவாசக் குழாயில் தடையிருப்பதற்கான அறிகுறியாகும். இதனால் மூளைக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்து விடுகிறது. இது 100% ஆபத்தானதாக இருக்கலாம், ஏனெனில் இது இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது உடல் தரும் ஒரு எச்சரிக்கை. அதை புறக்கணிப்பது உடல்நலத்திற்கு ஆபத்தானது.தூங்கும்போது அதிகமாக குரல் எழுவது சுவாசக் குழாயில் தடையிருக்கலாம் என்பதற்கான அறிகுறி. இதனால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் குறைந்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.

May 18, 2026

பெண்களை தாக்கும் saree cancer.

இந்தியப் பெண்களிடையே இடுப்புப் பகுதியில் ஏற்படும் ஒரு வகை தோல் புற்றுநோய் (Squamous Cell Carcinoma) குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சேலை அல்லது பாவாடையின் கயிற்றை (Nada) நீண்ட காலமாக ஒரே இடத்தில் இறுக்கமாகக் கட்டுவதால் ஏற்படும் உராய்வு மற்றும் வியர்வை காரணமாக இப்புற்றுநோய் உருவாகிறது. இடுப்பில் கருப்புத் தழும்பு அல்லது ஆறாத புண் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். கயிற்றுக்குப் பதில் அகலமான பெல்ட் பயன்படுத்துவது மற்றும் இறுக்கத்தைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

May 16, 2026

”தாகம் எடுக்கும் வரை காத்திருக்காதீங்க!”

கோடைக்காலத்தில் தாகம் இல்லாவிட்டாலும், அதிக தண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமாகும். வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைசுற்றல், சோர்வு மற்றும் நீரிழப்பு (Dehydration) போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ,உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுவதுடன் சருமத்தையும் ஈரப்பதமாக வைத்திருக்கும். ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது ,2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

May 14, 2026

தண்ணீர் குடித்தால் தொப்பை,கொழுப்பு படியாது.

.ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.அப்போது தான் உடல் வறட்சியில்லாமல் இருக்கும் அதோடு உடலில் தங்கியிருக்கும்நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அது, மட்டுமன்றி சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் வறட்சி ஏற்படாது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால், வயிற்றைச் சுற்றி கொழுப்பு படியாது..

May 13, 2026

நுங்கு 

நுங்கில் 'ஆந்த்யூசைன்’ என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

May 11, 2026

ஒற்றைத் தலைவலியைவிரட்ட.......

'மைக்ரேன்' எனப்படும் ஒற் றைத் தலைவலியானது இளவய தினருக்கு வரும் நோய். இதன் தாக்கத்தை குறைக்க யோகா பயிற்சி செய்யலாம். விகிதாச்சார கணக்கு படி மாத்திரைகளால் வரும் பயனை விட யோகாவினால் வரும் பயன் அதிகமென்பது ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தியானப்பயிற்சியும் பயன்தரும் ஒருமுறை. சரியான நேரத்தில் உணவும் உறக்கமும் தேவை. தினமும் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்ய லாம். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். அதிகமாக கவலைப்படுவதையும் மன உளைச்சலையும் தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட பொருட் களை தவிர்க்க வேண்டும். பாட் டிலில் அடைத்து விற்கப்படும் பழபானங்கள், துரிதஉணவுகள், இறைச்சி வகைகள் நீண்ட நாட் கள் கெடாமல் இருக்கும் வகை யில் செயற்கை'ப்ரிசர்வேடிவ்' சேர்க்கப்படுவதால் இவற்றை தவிர்க்க வேண்டும். இவை ஒற் றைத் தலைவலியை அதிகரிக்கும் தன்மையுடையது. தலைவலி அதி கமாக இருந்தால் சில நாட்களுக்கு சாக்லெட், ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 37 38

AD's



More News