25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆரோக்கியம்

Mar 30, 2026

மருத்துவ குணம் நிறைந்த நுங்கு.

ஒரு பனை இருந்தால் அதைச் சுற்றி பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை தொடங்கும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறு கின்றனர். ஏனெனில், பனை மரத்தை நம்பி பல்வேறு சிறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழ்கின் றன., கோடை காலத்தில் பனை தரும் நுங்கு அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும்.ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தநுங்கு விற்பனைக்கு வரும். கோடை வெயிலை தாங்கி மனித உடல் குளிர்ச்சி பெற நுங்கு துணை புரிகிறது.நுங்கில் உடலுக்கு ஊட்டம் தரும் வைட்டமின் பி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், துத்தநாகம். பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.வெப்பத்தால் உடலில் உருவாகும் சோர்வை நீக்கி உடலின் வெப்பநிலையை சமநிலைசெய்கிறது. கோடையில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படும். இதனைதடுப்பதில் நுங்கு முதலிடம் வகிக்கிறது. மேலும், உடல் வெப்பத் தால் குடலில் ஏற்படும் வறட்சியை தணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை போக்குகிறது.வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தோல் நோய்கள், கொப்புளங்களை தடுக்க நுங்கு அவ்வப்போது உண்ணலாம். நுங்கில் உள்ள அந்த்யூசைன் என்ற ரசாயனம் மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Mar 28, 2026

உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு.பழைய சோறு .

சமைத்த சாதத்தில் மீதமாகும் சோற்றில் ,தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை  சாப்பிடும் உணவான, பழைய சோறு உழைக்கும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. ஆனால் இன்று பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக மாறி இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருந்து வரும் இது,உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருவதால், நம் முன்னோர்களால் அமுதம் என்று போற்றப்பட்டது.பழைய சோற்றில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு உதவக்கூடியவை. குறிப்பாக, குடல் இயக்கங்களை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கக்கூடியவை. பழைய சோற்றில் கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும், அரிதான வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்றவையும் இடம் பெற்றுள்ளன. பழைய சோற்றில் உள்ள இந்த நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன.பழைய சோற்றின் புளிப்புச் சுவைக்கு காரணம் அதில் உள்ள லாக்டிக் பாக்டீரியா அமிலம் ஆகும். பழைய சோறு சாப்பிடும்போது, தயிர், உப்பு, சீரகம், சாம்பார் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது சுவையையும், சத்துக்களையும் அதிகரிக்கும்.

Mar 23, 2026

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திராட்சைப் பழம் .

திராட்சை பழத்தில் வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை உடல் ஆரோக்கியத்திற்கும் சரும அழகிற்கும் பெரிதும் உதவுகின்றன. இதை உட்கொள்வதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.குறிப்பாக, கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஆர்கானிக் அமிலங்கள் செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கின்றன. புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் பண்பு கொண்ட திராட்சை, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், சிறுநீரக செயல்பாட்டை சீராக்குவதுடன், இதிலுள்ள லிவோலியிக் அமிலம் முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி கூந்தல் உதிர்வை தடுக்கிறது. தினசரி உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.வெற்று வயிற்றில் சாப்பிடும்போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்த சுத்திகரிப்புக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறதுதிராட்சையில் உள்ள பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்துகள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

Mar 16, 2026

தூக்கத்தை எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாது.

 ஒருவர் போதிய அளவு தூக்கத்தை பெறாத போது டைப்-2 நீரிழிவு பாதிப்பு முதல் இதய பாதிப்பு வரை பல நோய்கள் உருவாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. உடலின் பல முக்கியமான ரசாயன மாற்ற செயல்பாடுகள் தூக்கத்தில்தான் நடைபெறுகின்றன. உடல் மற்றும் மூளை முழுமையாக ஓய்வெடுக்க, ஆற்றலை மீட்க, நினைவாற்றல் ஒருங்கிணைப்பு, உணர்ச்சி கட்டுப்பாடு. நோய் எதிர்ப்பு சக்தியை பெற தூக்கம் உதவுகிறது. போதிய தூக்கம் இல்லாத நிலையில், குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல்நலக்குறைவுக்கு வழிவகுத்து, அன்றாட செயல்பாட்டையும் பாதிக்கும்.மருத்துவர்களின் கூற்றுப்படி, பள்ளி வயது குழந்தைகளுக்கு 9-11 மணி நேரமும், இளம் வயதினருக்கு 8-10 மணி நேரமும், 18-64வயதினருக்கு 7-9 மணி நேரமும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 7-8 மணி நேரமும் தூக்கம் முக்கியம்.ஒருவருக்கு போதிய தூக்கம் இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் என்ன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாள் முழுவதும் சோர்வு அல்லது சோம்பல் தன்மை, அடிக்கடி கொட்டாவி விடுதல், மனதில் எரிச்சல், மனச் சோர்வு, பதட்டம், மன அழுத்தம், எந்த வேலையும் செய்ய ஆற்றல் அல்லது உந்துதல் இல்லாத நிலை, எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவுமறதி, அதிகரித்த பசி, அடிக்கடி சாப்பிட தோன்றுதல் ஆகிய அறிகுறிகள் தென்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  உடல் நலனை காக்க தூக்கம் மிகவும் அவசியம்,  மருத்துவர்கள் தூக்கத்தைஎக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாது என கூறுகின்றனர். 

Mar 13, 2026

மருத்துவ குணங்கள் நிறைந்த அதலைக்காய்,

அதலைக்காய், பொதுவாகஅதிகம்விரும்பிசமைக்கப்படும்காய்அல்ல.பலர்இதைருசித்திருக்கக்கூடமாட்டார்கள்.ஆனால், சித்தமருத்துவர்களுக்கும். ஒரு சில விவசாயிகளுக்கும் மிகவும் பரிச்சயமானசொல்,அதலைக்காய். இது பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.மருத்துவ குணங்கள், சத்துகளின் மகுட மாகத் திகழும் அதலைக்காய், குளிர் காலத்தில் அதிகமாக விளையும்.இது சாதாரணமாக கண்மாய்க்  கரைகள், புறம்போக்கு நிலங்கள், வேலியோரங்களில் வளரும் கொடி வகையாகும்.அதலைக்காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிற வெளித் தோலில் எட்டு நுண்ணிய வரிகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டைவடிவில்வழுவழுப்பாகவும்பளிச்சென்றும்இருக்கின்றன.அதலைக்காயை அப்படியே சமைத்தும், வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது அதலைக்காய். இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின் சி. பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிகமாக உள்ளன.மஞ்சள் காமாலை பிரச்சினைக்கு சிறந்த மருந்தாக அதலைக்காய் கருதப்படுகிறது. குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த காய் அருமருந்தாக அமையும்.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் அருமையான ஒரு காய், இதன் மருத்துவ குணங்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி. சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுக்குள் வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அதலைக்காய் நிவாரணம் அளிக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு உள்ளானவர்கள், இந்தக் காயை தினந்தோறும் அவர் களது உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து  விடுபடலாம்.குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு அதலைக்காய் நன்மை பயக்கும். இதில் உள்ள சத்துகள், வயிற்றுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்  முக்கியப் பங்கை வகிக்கின்றன, அதலைக்காய் வயிற்றில் காணப்படும் கிருமிகளை அழிப்பதோடு  குடற்புழு பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.ஆனால், மற்ற காய்கறிகளைப் போல அதலை காயை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது.அதிக நாட்கள் வைத்திருந்தால் இது தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால்காயின்  தன்மையும், சுவையும் மாறிவிடும்.பாகற்காயை எப்படி பொரியல் அல்லது. வைத்துச் சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை  சாப்பிடலாம்.காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று  வித்தியாசமானதுதான். இது கசப்புத் தன்மை  கொண்டதாக இருந்தாலும் உண்பதற்கு ஏற்ற  சுவையில் இருக்கும்.எனவே அனைத்து வயதினரும் இந்த உட்கொள்ளலாம். அதலைக்காயின் மருத்துவ  குணங்கள், ஆரோக்கிய நன்மைகளுக்காகவே  அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் நல்லது. 

Mar 11, 2026

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துவதால்...

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், அதன் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை அறிந்தவர்கள் குறைவுதான். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள்கிடைக்கும்.வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் சித்த மருத்துவத்திலும் வெல்லத்திற்கு முக்கிய இடம் உண்டு. வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தைச் சுத்திகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் உங்கள் சருமம் பொலிவு பெறுவதுடன், உடலும் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுகிறது.இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு வெல்லம் ஒரு சிறந்த நிவாரணியாகச் செயல்படுகிறது. மேலும், தொண்டை புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக அமைகிறது. உணவு அருந்திய பிறகு வெல்லத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், வெல்லம் செரிமான நொதிகளை சீராகச் செயல்படத் தூண்டுகிறது. இதனால், நாம் உட்கொண்ட உணவு எளிதில் உடைக்கப்பட்டு, விரைவாக ஜீரணமாக உதவுகிறது.இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட வெல்லத்தை சர்க்கரைக்கு மாற்றாக தாராளமாக பயன்படுத்தலாம். இருப்பினும், சர்க்கரையோ வெல்லமோ எதுவாக இருந்தாலும், அளவோடு எடுத்துக்கொள்வதுதான் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நல்லது.

Mar 10, 2026

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அவரைக்காய் .

இந்திய உணவுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறிதான் அவரைக்காய். இது சுவையானது மட்டுமல்லாமல், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. அவரைக்காயில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. இது செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. அவரைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.  அவரைக்காயின் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, இது இரத்த சர்க்கரை அளவைச் சீராக பராமரிக்க உதவுகிறது.  அவரைக்காயில் உள்ள மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசியத் தாதுக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றன.அவரைக்காயில் உள்ள சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளது.அவரைக்காயில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சத்துகளும் தேவையான அளவு இருக்கிறது. பிஞ்சு அவரைக் காயைப் பத்தியத்திற்குப் பயன்படுகிறது.அவரைக்காயுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.அவரைக்காயைப் பயன்படுத்துவதினால் குடல் வலுப்பெறுகிறது. பசியைத் தூண்டுகிறது. பித்தத்தைச் சரிசெய்கிறது.நீரிழிவு நோயாளிகளுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அவரைக்காய் மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக பிஞ்சு அவரை மிகவும் உடல் நலத்திற்கு உகந்தது.இதில் நார்ப்பொருள் அதிகமாக இருப்பதினால் மலச்சிக்கலையும் போக்குகிறது. உடல் வலிமையை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

Mar 09, 2026

நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருக லவங்கப்பட்டை.

 லவங்கப்பட்டையை நன்றாகப் பொடித்து, லவங்கப் பொடி - ஒரு தேக்கரண்டி, தேன் - ஒரு தேக்கரண்டி, சுடு தண்ணீர்-இரண்டு தேக்கரண்டி சேர்த்து பிசைந்து, மூட்டு வலி உள்ள இடத்தில் பற்று போட்டால், உடனே வலி குறையும். இதை, தினமும் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி முழுமையாக குறையும்.லவங்கப் பவுடர்,இரண்டு மேஜைக்கரண்டி எடுத்து, தேன் கலந்து, சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், கடின உணவும் ஜீரணமாகிவிடும்.சுத்தமான தேன்ஒரு மேஜைக்கரண்டி.. லவங்கப்பட்டை பவுடர்ஒரு தேக்கரண்டி கலந்து, படுக்க செல்லும் முன் முகத்தில் பூசி, காலை எழுந்தவுடன் வெந்நீரில் கழுவினால், இரண்டு வாரங்களில் முகப்பரு மறைந்து விடும்.லவங்க பவுடரை, தேனுடன் கலந்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டால், உடலில் சக்தி கூடும். தலைமுடியில் தேய்த்து குளித்தால், முடி உதிர்வது நிற்கும்.சூடான தேன்- ஒரு மேஜைக்கரண்டி, லவங்க பவுடர்- நான்கு தேக்கரண்டி கலந்து, காலை,மாலை என, மூன்று நாட்களுக்குசாப்பிட்டால், சளி, இருமல் மற்றும் சைனஸ் தொல்லைகள் அகலும்.லவங்க பவுடர், தேன் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, பல் வலி உள்ள இடத்தில் தினமும் மூன்று வேளை பூசினால் வலி நீங்க விடும்.வயிற்று வலி, அல்சர், வாயு பிரச்னை ஆகியவற்றிற்கு தேன், லவங்கப்பட்டை பவுடர் உட்கொண்டால் குணம் பெறலாம்.தேனும், லவங்கப்பட்டையும், வெள்ளை ரத்த அணுக்களை பலப்படுத்தும். இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் பெருகும்.தேன், லவங்கப் பட்டை பவுடரை, ஒரு கோப்பை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும், இரவில் உறங்க செல்வதற்கு முன்பும், தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம். லவங்க பவுடர்- ஒரு சிட்டிகை, தேன் அரை தேக்கரண்டி கலந்து, பல் ஈறுகளில் பூசினால், அது உமிழ்நீருடன் உட்சென்று, மலட்டு தன்மையை நீக்குவதாக கூறப்படுகிறது.

Mar 07, 2026

உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தரும் பேரீச்சம்பழம்.

உடலுக்கு தேவைப்படும் அனைத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள் கிடைக்க தினமும் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.பேரீச்சம்பழங்களின் தாயகம் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தாயகமான பெர்சியா ஆகும். தொடர்ந்து ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இன்று உலகம் முழுவதும் பரவியது. வெப்ப மண்டல பகுதிகளில், குறிப்பாக வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகம்விளைவிக்கப்படுகிறது. வறண்ட வெப்ப மண்டல மண்ணில் விளையும் பேரீச்சம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. பேரீச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்-பி6, நார்ச்சத்து போன்றவை உள்ளன. குழந்தைகளுக்கு தினமும்ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்கள் கொடுத்து வந்தால் சுறுசுறுப்பாகவும், நல்ல நினைவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன. 

Mar 05, 2026

புற்றுநோய் வராமல் தடுக்கும் பாலக் கீரை.

பாலக் கீரை(Spinach) வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த சத்துணவு. இது புற்றுநோயைத் தடுக்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், எலும்புகளைப் பலப்படுத்தும், கண் பார்வைக்கு நல்லது, மலச்சிக்கலைப் போக்கும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சோகையைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். இதில் உள்ள பீட்டாகரோட்டின், ஃபிளவனாய்டுகள் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது.எலும்புகளை வலுப்படுத்தவும், உடல் வலிமைக்கும் உதவுகிறது.ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட், வைட்டமின் K மூளை செல்களைப் பாதுகாத்து அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும்.இரும்புச்சத்து நிறைந்தது, இரத்த இழப்பைக் குறைத்து இரத்த சோகையைத் தடுக்கும்.வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பார்வைக்கு நன்மை பயக்கும்.நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 35 36

AD's



More News