25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரோக்கியம்

Jun 09, 2026

சிந்திக்கும் திறனை எப்போதும் கூர்மையாக வைத்திருக்கும் மனித மூளை .(சூப்பர் கம்ப்யூட்டர்)

நமது உடல் எடையின் வெறும் 2% மட்டுமே கொண்ட மனித மூளை, உடலின் மொத்த சக்தியில் 20% வரை பயன்படுத்தும் ஒரு 'சூப்பர் கம்ப்யூட்டர்' ஆகும். ஒரு மின்விளக்கைஎரிய வைக்கும் அளவிற்கு ஆற்றலைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் இந்தஅதிசய உறுப்பைப் பராமரிக்க, ஒமேகா-3 நிறைந்த வகைகள், நினைவாற்றலைமேம்படுத்தும் வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் மூளைச் செல்களைப்பாதுகாக்கும் பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்ப்பது அவசியம். இந்தச்சத்தான உணவுகள் மூளையின் ஆக்சிஜன் தேவையையும் ஊட்டச்சத்தையும் பூர்த்திசெய்து, அதன் சிந்திக்கும் திறனை எப்போதும் கூர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.

Jun 08, 2026

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா?. தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?.

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடுவதை விட, அவற்றை நீரில் ஊறவைத்து உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதற்கான முக்கிய காரணம் அவற்றில் உள்ள 'பைடிக் அமிலம்' ஆகும். இந்த அமிலம் இரும்பு, கால்சியம்போன்ற தாதுக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது.ஊறவைப்பதன் மூலம் இந்த அமி வீரியத்தை சிதைத்து, ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யலாம்.வால்நட்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் கசப்புத்தன்மை, 12 மணி நேரம் ஊறவைக்கும்போது மென்மையாகி செரிமானத்திற்கு எளிதாகிறது.அதேபோல், முந்திரியை 2-4 மணி நேரம் ஊறவைப்பது ஒவ்வாமையை தடுத்து, நொதிகளை சீராக்கும்.நார்சத்து மிகுந்த அத்திப்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து உண்பதால், குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் நீங்கும். செரிமான மண்டலத்திற்கு அழுத்தம் கொடுக்காமல், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இந்த ஊறவைக்கும் முறை பெரிதும் உதவுகிறது. தினமும் சரியான அளவில் ஊறவைத்த நட்ஸ்களை உண்பது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

Jun 06, 2026

கோடையில் தாகம் தணிக்கும் வெள்ளரிக்காய்.

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வெள்ளரிக்காய் வழங்குகிறது. அதன் முக்கிய நன்மைகள் . உடனடி நீரேற்றம் (Hydration): வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. இது கோடையில் உடல் வறட்சியைத் தடுத்து, உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.சீரான செரிமானம்: இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் மலச்சிக்கலைத் தடுத்து, உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது.சர்க்கரை அளவு கட்டுப்பாடு:இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிகக் குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இது சிறந்த தேர்வாகும். நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பு:இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ஏற்படும் உள் எரிச்சல் மற்றும் வீக்கங்களைக் குறைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகின்றன.வெள்ளரிக்காய் வெறும் தாகம் தணிக்கும் காய் மட்டுமல்ல;,கோடையில் உடலைக் காக்கும் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.

Jun 05, 2026

இடது பக்கம் தூங்கும் பழக்கம் .

இடது பக்கம் திரும்பி தூங்குவது ஜீரணத்திற்கு இயற்கை ஆதரவு தருகிறது. வயிறு இடது பக்கத்தில் இருப்பதால் அமிலம் மேலே வருவது குறைகிறது. அசிடிட்டி மற்றும் மார்பு எரிச்சல் தணிய உதவுகிறது. அமில ரிஃப்ளக்ஸ் குறைய உதவுகிறது. உணவு சிறுகுடலுக்கு சீராக நகர உதவுகிறது. சத்துக்கள் உடலில் நன்றாக உறிஞ்சப்பட உதவுகிறது. இரவு உணவுக்குப் பிறகு 2-3 மணி நேரம் கழித்து, வாரத்தில் பெரும்பாலான நாட்களில் இந்த முறையை பின்பற்றலாம்.

Jun 04, 2026

இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரைஆழ்ந்து தூங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை உடலின் மெலடோனின் சுரப்பு உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது மன அழுத்தத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். ஹார்மோன் சமநிலை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இதுவே மிகச்சிறந்த வழி.

Jun 03, 2026

உடல் ஆரோக்கியம் கெடுவதற்கான அறிகுறிகள்.

கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோசம் வரப்போகிறது என அர்த்தம். காதில் அதீத குடைச்சல் அல்லது வலிவந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம்.அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரழிவு வரலாமெனவும் அர்த்தம்.பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தம்.கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம்.கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்பு கோடு அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனம் கொள்ளவும் என அர்த்தம்.

Jun 02, 2026

மன அழுத்தத்தைக் குறைக்க  உதவும் உணவுகள்.

 1.கற்பூரவள்ளி  - மனநிலையை சீராக்க உதவும். 2. டார்க் சாக்லேட் - Stress Hormones குறைக்கும். 3. நட்ஸ்கள் & விதைகள் - மூளை செயல்பாட்டை மேம்படுத்தும். 4. முருங்கை கீரை & கீரை வகைகள் - நரம்பு அமைதிக்கு உதவும். 5.தயிர்- Gut Health மேம்பட்டு மனநிலை நல்லதாகும். 6. கிரீன் டீ -  மன அமைதி தரும். 7. பழங்கள்-  உடல் & மன சக்தி அதிகரிக்கும். 8. முழுதானியங்கள் - Energy Steady ஆக இருக்கும்.சரியான உணவு = நல்ல மனநிலை.கூடவே...நல்ல தூக்கம், உடற்பயிற்சி , இவை சேர்ந்து தான் Stress குறையும்.

Jun 01, 2026

ENERGY FOODS .

காலை வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் உடனடி சக்தி கிடைக்கும்.கம்பு கூழ் குடித்தால் நீண்ட நேரம் energy stable ஆக இருக்கும்.வாழைப்பழம் சாப்பிட்டால் potassium மூலம் சோர்வு குறையும்.நிலக்கடலை அல்லது பாதாம் சாப்பிட்டால் நல்ல கொழுப்பு energy-ஐ அதிகரிக்கும்.முருங்கைக்கீரை சாப்பிட்டால் இரும்புச் சத்து அதிகரித்து சக்தி உயரும்.தேங்காய்தண்ணீர் குடித்தால் electrolytes balance .சாமை அல்லது thinai சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும்.இந்த foods சேர்த்தா நாள் முழுவதும் energy strong ஆக இருக்கும் .

May 30, 2026

நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் ஏற்படும் 7 பேராபத்துகள்!

இன்றைய டிஜிட்டல் உலகில் பலரும் பல மணி நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்கிறார்கள். ஆனால், தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பது நம் உடலுக்குள் மெல்லக் கொல்லும் விஷமாக மாறக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் இதோ:1. ⚖️ உடல் பருமன் அதிகரிக்கும்ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது உடலில் கலோரிகள் எரிக்கப்படும் அளவு மிகக் கடுமையாகக் குறைகிறது. இதனால் தேவையற்ற கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் (Obesity) வேகமாக அதிகரிக்கும்.2. ⚡ முதுகு மற்றும் கழுத்து வலிநீண்ட நேர அமர்வு நம் முதுகெலும்பு, தோள்பட்டை மற்றும் கழுத்துத் தசைகளுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. இது நாளடைவில் தீராத முதுகு மற்றும் கழுத்து வலியை (Chronic Pain) உண்டாக்கும்.3. 📉 தசை பலவீனம்உடலுக்கு இயக்கம் இல்லாததால், குறிப்பாக கால் மற்றும் இடுப்புப் பகுதித் தசைகள் தங்கள் வலிமையை இழந்து பலவீனமடைகின்றன. இது பிற்காலத்தில் நடப்பதில் கூட சிரமத்தை ஏற்படுத்தலாம்.4. 🩸 இரத்த ஓட்டம் குறையும்கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால், கால்களில் வீக்கம் ஏற்படலாம். மேலும், நரம்புகளில் ஆபத்தான இரத்தக் கட்டிகள் (Blood Clots) உருவாவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.5. 🧠 மன அழுத்தம் மற்றும் கவலைஉடல் உழைப்பு குறையும் போது மூளையின் செயல்பாடும் மந்தமாகிறது. இது மன அமைதியைக் குலைத்து, மன அழுத்தம் (Stress) மற்றும் தேவையற்ற பதற்றத்தை (Anxiety) உருவாக்கும்.6. 🔥 மெதுவான வளர்சிதை மாற்றம் (Metabolism)தொடர்ந்து உட்கார்ந்திருப்பது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மெதுவாக்குகிறது. இதனால் உணவு சரியாகச் செரிக்காமல், கொழுப்பை எரிக்கும் திறன் உடலுக்குக் குறைந்து போகிறது.7. 🦴 எலும்புத் திசு இழப்புஎலும்புகளுக்குப் போதிய வேலை தராததால் அவை அடர்த்தியை இழந்து பலவீனமடைகின்றன. இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு முறிவு அபாயங்களுக்கு வழிவகுக்கும்.45 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து 5 நிமிடம் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உடற்பயிற்சியும், இயற்கை உணவும் மட்டுமே நோயற்ற வாழ்விற்கு வழிவகுக்கும்!

May 29, 2026

வாழ்க்கையை மேம்படுத்தும் 10 பழக்கங்கள்.

1.தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி. 2. உங்களுக்கு பிடித்த 6 பாடல்கள் கேளுங்கள். 3.2 கப் தேநீர் / காபி  (அளவோடு பால் சேர்க்காமல்). 4. தினமும் 10 நிமிடம் சிரிக்கவும். 5. 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். 6.8 மணி நேரம் தூங்குங்கள். 7. 3 முறை சீரான உணவு சாப்பிடுங்கள் . 8. இரவில் அதிகம் சாப்பிடாதீர்கள். 9.5 வகையான பழங்கள் சாப்பிடுங்கள். 10.10 நிமிடம் தியானம் செய்யுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 37 38

AD's



More News