உடல் எடையை குறைக்க உதவும் மக்கானா கீர்
பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நம்மில் பலரும் இது போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்று பயப்படுவார்கள். வீட்டில் சமைத்து சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஆரோக்கியம் அதிகம் நிறைந்துள்ளது. இந்த வரிசையில் உடல் எடையை குறைக்க உதவும் தாமரை விதைகள் என்று கூறப்படும் மக்கானாவை வைத்து சுவையான ஆரோக்கியம் நிறைந்த மக்கானா கீர் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்:
2 கப் மக்கானா, 1 லிட்டர் காய்ச்சிய பால்,1/4 கப் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம், டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி,1 டேபிள் ஸ்பூன் திராட்சை, ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள், 2 டேபிள் ஸ்பூன் நெய்.
செய்வது எப்படி?
முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து ,ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி கொள்ள வேண்டும். நெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும். முந்திரி மற்றும் பாதாம் சிறிது பொன்னிறமானதும் இதில் 1 டேபிள் ஸ்பூன் திராட்சையை சேர்த்து கிளறி விட வேண்டும். இதற்க்கு பிறகு கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில்2 கப் மக்கானாவை குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் வறுத்து வைத்துள்ள மக்கானா ஒன்றரை கப் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாய் வைத்து மீதமுள்ள மக்கானாவை பால் ஊற்றி குறைந்தது ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மக்கானாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். இதற்கு பிறகு சீரான பதத்திற்கு வந்தவுடன் நாம் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இதற்கு பிறகு தேவையான அளவு சர்க்கரை மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் சமைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான மக்கானா கீர் தயார்.
0
Leave a Reply