25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 27, 2024

அதிக மின்சாரம் தரும்  புதிய தாது “'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்'

புதைபடிவ எரிபொருட்களால் புவியில் மாசுபாடு அதிகரிக்கிறது. அதற்கு மாற்றாகவே சூரிய ஒளி மின்சாரம் முன்மொழியப்படுகிறது.சூரிய ஒளித் தகடுகள் பெரும்பாலும் சிலிக்கானால் தான் செய்யப்படுகின்றன. சில இடங்களில் சிலிக்கானுக்கு மாற்றாக பெரோவ்ஸ்க்கைட்   ( Perouskite )எனும் தாதுப்பொருளும் பயன்படுகிறது. இதில் கால்சியம், டைடானியம் ஆக்ஸைட் ஆகியவை இருக்கும்.இந்தத் தாதுவின் விலையும் கனமும் குறைவானது. அதிக வளையும் தன்மை கொண்டது. ஆனால் பிரச்னை என்னவென்றால், இது சுலபமாக உடைந்துவிடும். சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்தால் பலவீனமாகி விடும். சீனாவில் உள்ள ஜீஜியாங் பல்கலை விஞ்ஞானிகள் இந்தத் தாதுவில் சிறிய மாற்றம் செய்து, ஒரு புது வகையை உரு வாக்கியுள்ளனர்.இதன் பெயர் 'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்' இதில் ஒழுங்கற்ற கரிமப் படலங்களும், ஒழுங்கான கரிமமற்ற படலங்களும் உள்ளன.இதனால் வெயில், மழையைத் தாங்கும் ஆற்றலைப் பெறுகின் றன. 1000 மணி நேரம் சூரிய ஒளியில் இருந்தாலும் இவற்றின்  மின்சாரம் தயாரிக்கும்திறன் குறைய வில்லை. விரைவில் இது நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 27, 2024

செவித்திறனை மீட்க…..

புல்லட், குண்டுவெடிப்பின் சத்தத்தை கேட்டல் அல்லது தொடர்ந்து அதிக ஒலி இருக்கும் இடத்தில் பணிபுரிதல் ஆகிய காரணங்களால் ஏற்படுவது 'ஒலியால் ஏற் படும் செவித்திறன் இழப்பு (Noise induced Nearing loss -NTHL). தொழில்மயமாக்கம் காரணமாகத் தொழிற்சாலைகள் பெருகுவதால் இந்தக் குறைப்பாடு பலருக்கும் ஏற்படுகிறது. செவித்திறன் மேம்படுத்தும் கருவிகள் பொருத்தலாமே அன்றி, இதைச் சரிசெய்யவே முடியாது என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது சில சீன ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவத்தையும், குடல் வாழ் உயிரினங்கள் பற்றிய தற்போதைய மருத்துவ அறிவையும் இணைத்து, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர். அதிக ஒலியால் குடல் நுண்ணியிரிகள் நலிவடைகின்றன. அவற்றுள் சில S1PR2 உள்ளிட்ட சில வகை கொழுப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்தக் கொழுப்பு தான் கேட்கும் திறனைக் காக்கிறது. அயன் ஆக்ஸைட் நானோ துகள்கள் மீது செல்லுலோஸைப் பூசி எலிகளுக்கு வாய் வழியே கொடுத்தனர். இது குடலை அடைந்ததும் நல்ல நுண்ணுயிர்களை நலமடையச் செய்தது. இதனால் கேட்கும் திறன் மேம்பட்டது. இந்த மருந்து விரைவில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Jul 26, 2024

வெள்ளைக்காரனை பார்த்து பயந்தவன எல்லாம் சாதாரண சிறைல வச்சான்

வெள்ளைக்காரனை பார்த்து பயந்தவன எல்லாம் சாதாரண சிறைல வச்சான் வெள்ளக்காரனே பார்த்து பயந்த தியாகிகள் மட்டும் தான் அந்தமான் சிறைல வச்சான் காங்கிரஸ் உடம்பில் இந்தியன். ரத்தம் ஓடும் போது வெளியிட்ட தபால் தலை. இப்பொழுது இத்தாலி ரத்தம் ஓடுகிறது.

Jul 26, 2024

73 வயதில் 11 வகையான ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருக்கும் பாட்டி ராதாமணி அம்மா 

73 வயதில் 11 வகையான ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருக்கும் பாட்டி ராதாமணி அம்மா  .கேரளாவைச் சேர்ந்த 73 வயதான ராதாமணி அம்மா, ஜேசி பி & கிரேன் உட்பட 11 வாகன உரிமங்களைக் கொண்ட நாட்டிலேயே ஒரே பெண்மணி ஆவார்.

Jul 26, 2024

ஒன்பது காரட் தங்கத்துக்கு 'ஹால்மார்க்' வழங்க கோரிக்கை

 தங்கம் மற்றும் வெள்ளியின் வரலாறு காணாத விலை உயர்வை அடுத்து, 9 காரட் தங்கத்துக்கும் 'ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட அடையாள எண்களை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை எழுந்து உள்ளது.தற்போது வரை 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்துக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்துஆலோசிப்பதற்காக, ஐ.பி.ஜே.ஏ., எனும் இந்திய தங்கக் கட்டி மற்றும் நகை கடைக்காரர்கள் சங்கம், பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய கழகத்தின் நிர்வாகிகளுடன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, 9 காரட் தங்கத்துக்கும் ஹால்மார்க் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இது, இப்பிரிவு தங்கத்தில் முதலீடு மேற்கொள்ள, முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நில வரப்படி, 10 கிராம் கொண்ட 9 காரட் தங்கத்தின் விலை 24,070 ரூபாய். இதுபோக, கூடுதலாக 3 சதவீத ஜி.எஸ்.டி... வசூலிக்கப்படும்.

Jul 25, 2024

காற்றிலிருந்து வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனம்

காற்றிலிருந்து வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் ஆராய்ச்சிக்கு பில் கேட்ஸ் உதவ உள்ளார். கரியமில வாயுவுடன் நீரிலிருந்து பிரிக்கப்பட்ட ஹைட்ரஜனை இணைத்துக் கொழுப்புகளை உருவாக்கும் இந்த  முயற்சியால் கால்நடைகளை அதிகளவு நம்பி இருப்பது குறையும்.

Jul 24, 2024

குடல் நுண்ணுயிரிகளுக்கும் ஆட்டிஸம் நோய்க்கும் உள்ள தொடர்பு

 குடல் நுண்ணுயிரிகளுக்கும் மனஅழுத்தம் அல்சைமர் நோய்க்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே நடந்த ஆய்வுகள் நிறுவியுள்ளன. தற்போது ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலை குறிப்பிட்ட சில குடல் நுண்ணுயிரிகளுக்கும் ஆட்டிஸம் நோய்க்கும் உள்ள தொடர்பை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளது . இதன் வாயிலாக, எதிர்காலத்தில் ஆட்டிஸம் நோய்க் கான மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Jul 24, 2024

ஆனந்த் -ராதிகா திருமணத்தில் குவிந்த பரிசுகள்

.உலகமே வியந்து போகும்படி, கடந்த ஜூலை12,2024 அன்று பிரமாண்டமாகஆனந்த் அம்பானி மற்றும்ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிகளின்திருமணம் நடந்து முடிந்துள்ளது.இந்த திருமணம் மும்பையில்3 நாட்கள் இடம்பெற்றது.இந்த திருமணத்தில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆனந்த்அம்பானி மற்றும் ராதிகாமெர்ச்சன்ட் திருமணத்தில் வந்த பரிசுகள் தொடர்பிலானவிவரங்கள்.அம்பானி குடும்பத்தினர் - பாம் ஜுமேராவில் 3.000 சதுர அடி பரப்பளவில் உள்ள ஆ டம்பரமான மாளிகை (ரூ. 640 கோடி) ஜெஃப் பெசோஸ் - ரூ. 11,50 கோடி மதிப்புள்ள புகாட்டி ஜான் சினா - ரூ. 3 கோடி மதிப்புள்ள  லம்போர்கினி மார்க் ஜுக்கர்பெர்க் - ரூ.300 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானம் பில்கேட்ஸ் - ரூ.9 கோடி மதிப்புள்ள வைர மோதிரம், 180 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான படகு சுந்தர் பிச்சை - ரூ.100 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் இவான்கா டிரம்ப் - அமெரிக்காவில் ரூ. 80 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான மாளிகை  கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் - ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி - கையால் செய்யப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள சால்வய்  அக்ஷய் குமார் - ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்க பேனா ஷாருக்கான்  - பிரான்சில் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பச்சன்கள் - ரூ. 30 கோடி மதிப்புள்ள மரகத நெக்பீஸ்  ஆலியா பட் - ரன்பீர் கபூர் - ரூ. 9 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் கார்  சல்மான்  - ரூ.15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் - ரூ.20 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார்.

Jul 23, 2024

ஆனந்த் அம்பானி திருமணத்தன்று அணிந்திருந்த தலைப்பாகையின் விலை 160 கோடி (kalgi )

இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவருமான முகேஷ் அமானியின இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்ச ன்ட் உடன் ஜூலை12- இல் திருமணம் நடந்தது.இந்த திருமண நிகழ்வில் அம்பானி குடும்பத்தினர் மட்டுமே பல நூறு கோடி மதிப்பிலான ஆடை, ஆபரணங்களை அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.ஆனந்த் அம்பானி சிவப்பு மற்றும்  தங்கநிறத்தில் ஆன ஷெர்வானி அணிந்திருந்தார். அதிலும், ஆனந்த் அம்பானி அணிந்திருந்த தலைப்பாகை மட்டும்100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.அந்த தலைப்பாகையில், ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களால் அணிந்து கொள்ளப்படும் kalgi எனப்படும் ஆபரணம் இடம் பெற்றிருந்தது. அரிய வகை வைரங்களால் உருவாக்கப்பட்ட அந்த தலைப்பாகையின் விலை மட்டும் சுமார் ரூ.160  கோடி என சொல்லப்படுகிறது.5000 கோடி வரை செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த திருமண விழாவில் நாட்டின் பிரதமர்மோடி முதல் திரை பிரபலங்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆனந்த் அம்பானி தனது நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு,2 கோடி மதிப்பிலான ஆடெமர் ஸ் வாட்ச் (Audemars Piguet)-ஐ பரிசாக வழங்கினார்.

Jul 23, 2024

இரயில் பயணத்தின்போது இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டால் ….

இரவு நேர இரயில் பயனத்தின்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிடுவோம் என்ற பயம் இனி வேண்டாம். உங்கள் கைபேசியில் 139க்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவு செய்தால் போதும். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும்உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வந்துவிடும். 

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 53 54

AD's



More News