இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்'டி -20'உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.
இந்தியா, இலங்கை யில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது.
'சூப் பர்-8 போட்டியில் (பிரிவு-1) நேற்று கொல் கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின.
'டாஸ்' வென்ற இந் திய கேப்டன் சூர்யகுமார், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் வலுவான அடித்தளம் அமைத்தனர். முதல் விக் கெட்டுக்கு 53 பந்தில் 68 ரன் சேர்த்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 195/4 ரன் எடுத்தது.
இந்திய அணி 19.2 ஓவரில் 199/8 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.
'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் வென்றது.
'டி -20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' (பிரிவு - 1) போட்டியில், தென் ஆப் ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று மோதின. அரையிறுதிக்கு முன்னேறியதென் ஆப்ரிக்கா அணி ,ஜிம்பாப்வேஅரையிறுதி வாய்ப்பை இழந்ததால், இப்போட்டிக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜிம் பாப்வே அணிக்கு ரியான் பர்ல் (5), டோனி முன் யோங்கா (2) சொற்ப ரன் னில் அவுட்டாகினர்.
ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட் டுக்கு 153 ரன் எடுத்தது.
தென் ஆப்ரிக்க அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்து வெற்றி பெற்றது..
ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
0
Leave a Reply