வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (07.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை அணையினை நேரில் சென்று பார்வையிட்டு, அணையின் கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு, பயன்பெறும் பாசன நிலங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், வெம்பக்கோட்டை அணைப்பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள், அங்கு வளர்க்கப்படும் மீன்களின் வகைகள், பயன்பெறும் பயனாளிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளையும், அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply