விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடரில் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று பெங்களூருவில், கர்நாடகா- மும்பை, சவு ராஷ்டிரா-உ.பி., அணிகள் மோதிய காலிறுதி போட்டிகள் நடந்தன. 'டாஸ்' வென்ற பெங்களூரு பீல்டிங் செய்தது.
முதலில் களமிறங்கிய மும்பை அணி 50 ஓவரில் 254/8 ரன் எடுத்தது. கர்நாடக அணி 33 ஒவரில் 187/1 ரன் எடுத்த போது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது.
இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வி.ஜே.டி., (வி.ஜெயதேவன்) விதிப் படி, கர்நாடக அணி 55 ரன்னில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்றோரு போட்டியில் உத்திர பிரத தேசம் அணி 50 ஓவரில் 310/8 ரன் குவித்தது சௌராஷ்டிரா அணி 40.1 ஓவரில் 238/3 ரன் எடுத்தது,
சவுராஷ்டிரா அணி 17 ரன்னில் வெற்றி பெற்றதாக வி.ஜே.டி., விதிப்படி, அறிவிக்கப் பட்டது. கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
0
Leave a Reply