25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PM KISAN) பெறும் விவசாயிகள், தங்கள் நிலஉடைமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PM KISAN) பெறும் விவசாயிகள், தங்கள் நிலஉடைமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில், வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள், கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைதுறை மற்றும் சகோதரத்துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு, வலைதளத்தில் கட்டணமின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது.இனி வருங்காலங்களில், மேற்காணும் துறைகளால்; செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களும், பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை((PMKISAN) மற்றும் பயிர் காப்பீடு PMFBY) திட்டங்களும் இப்பதிவுகளின்  அடிப்படையிலேயே செயல்படுத்தப்படவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1,03,016 விவசாயிகள் உள்ள நிலையில், இதுவரை 61,278 பேர் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர். மீதம் 41,738 விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கொண்டு பதிவு மேற்கொண்டு தனிப்பட்ட அடையாள எண் பெறலாம்.விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, நிலவுடைமை பதிவுக்கான கால அவகாசம் ஜீலை-15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PMKISAN) பெற்றுக் கொண்டு வரும் விவசாயிகள், தங்கள் நிலஉடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை முதல் பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை(PMKISAN) கிடைக்கப்பெறாது.  எனவே, பிரதமரின் கௌரவ ஊக்கத்தொகை(PMKISAN)  பெற்று வரும், நிலஉடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள், உடனடியாக பதிவு செய்யவேண்டும்

  தங்களது கிராமங்களில் விவசாயிகளை தொடர்பு கொள்ளும் வேளாண்மைத்துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இப்பணியினை விரைந்து முடித்து  பயன் பெற்றிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News