“டென்சிங் நார்கே விருது -2024“ பெற இணையதளம் மூலம் 30.06.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்
ஒன்றிய அரசின் சார்பாக, தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல்புரிந்தவர்களுக்கு “டென்சிங் நார்கே விருது” ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு துணிச்சலான நடவடிக்கைகள் நிலம், நீர் மற்றும் ஆகாயம் (காற்று) மண்டலத்தில் செய்தமைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது.
மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விபவரங்கள் இந்திய அரசு இணையதள முகவரியான http://awards.gov.in மூலம் 30.06.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விளையாட்டு துறைக்கு விண்ணப்பங்கள் 30.06.2025ம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply