லோகேஷ் கனகராஜ், கமல், விஜய் மற்றும் கார்த்தி நடிப்பில் இயக்கிய படங்கள் தற்போது, ரஜினி நடிப்பில், கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், அடுத்தபடியாக, அஜித் நடிப்பிலும் படம் இயக்க,அஜித்துக்கு ஏற்ற கதையைஉருவாக்கிவருவதாககூறும், லோகேஷ்கனகராஜ்,கைதி 2' படத்தைஇயக்கிமுடித்ததும், அடுத்து, அஜித்தை சந்தித்து கதை சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்.
இயக்குனர் ஷங்கர். கேம் சேஞ்சர் படம் திரைக்கு வந்ததை அடுத்து, 'வேள்பாரி' என்ற நாவலை மையமாக வைத்து, பாகுபலி போன்று, பிரமாண்ட படம் இயக்க தயாராகி வருகிறார். சரித்திர பின்னணி கொண்ட இந்த படம், 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. அதையடுத்து, ஹாலிவுட் தரத்தில், 'சயின்ஸ் பிக் ஷன்' படத்தையும் இயக்கப் போகிறார். 'மல்டி ஹீரோ கதையில் உருவாகும் அந்த படம், 'ஸ்பை திரில்லர்' கதையில் உருவாகிறது.
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'வீரதீர சூரன்' பகுதி 2. ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.. இப் போது மார்ச்27ல் இப்படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
பிரபாஸ், அமிதாப் பச்சன். கமல், தீபிகா படுகோனே நடிப் பில் கடந்தாண்டு நாக் அஷ்வின் இயக்கத்தில் வெளியாகி ரூ.1200 கோடி வசூலித்த படம் 'கல்கி 2898 ஏடி'. இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை நாக் அஷ்வின் துவங்கி உள்ளார். இந்நிலையில் ஜூனில் இரண்டாம் பாக படப்பிடிப்பு துவங்கும் என தயாரிப்பாளர் அஷ்வினி தத் தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாக இருந்த படம் ' புறநானுாறு'. சில காரணங்களால் அவர் விலக சிவகார்த்திகேயன் தற்போது அதில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் ஜெயம் ரவி,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பி டிப்பு நடக்கிறது. புறநானுாறு பட தலைப்பை சூர்யா நிறுவனம் தராததால் வேறு தலைப்பை தேடி வந்தனர். இப்போது 'பராசக்தி'என பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஒரு அறி விப்பு வீடியோவை உருவாக்கி உள்ளனர். அதற்காக சென்சார் சான்று பெற்ற போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.
திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக,. 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி இவர் முதன்முறையாக கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். நிஹாரிகா நவீன் நடிக்க, இளையராஜா இசைய மைத்துள்ளார். 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை இந்த குறும்படம் வென்றுள்ளது.
இன்றைய விவசாயி சந்திக்கும் பிரச்னைகளை சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக இப்படம் உரு வாகியுள்ளது" . விதார்த் நடிப்பில் வி.கஜேந்திரன் இயக்கியுள்ள படம் 'மருதம்'. ரக்ஷனா நாயகியாக நடித்துள்ளார். "இது விவசாயியின் வாழ்வியலை நிலத்தின் அவசியத்தை அழுத்தமாக பேசும் படைப்பு என்றார் கஜேந்திரன் .விவசாயம் ஆதி குடியின் முதல் தொழில். நிலத்திற்கும், மண்ணுக்கும், விவசாயிக்கும் இடை யிலான உறவு தான், மற்ற உறவுகளை விடவும் முதன்மையானது.
2025ல் முதல் வெள்ளிக்கிழமையான ஜன.3ல் ஏழு படங்கள் வெளிவந்தன. பொங்கலை முன்னிட்டு நான்கு வெவ்வேறு நாட்களில் 7 படங்கள் வெளிவந்தன. ஜன.24ல் 'பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், மிஸ்டர் ஹவுஷ்கீப்பிங், பூர்வீகம், வல்லான்' ஆகிய 6 படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியரான பா.விஜய் இயக்கி உள்ள படம் 'அகத் தியா'. ஜீவா,அர்ஜுன், ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. இப்போது இத்திரைப்படம் 2025, ஜனவரி 31ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
அபிஷேக் நமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிக் கும் படம் 'நாகபந்தம்'. தெலுங்கில் உருவாகி பான் இந் தியா படமாக வெளியாகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, புரி ஜகநாதர் கோயில்களில் மறைந்துள்ள பொக்கிஷங்கள், 108 விஷ்ணு கோயில்களை சுற்றியுள்ள மர்மங்கள், இந்த புனித தலங்களை காக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாக வைத்து ரூ.100 கோடியில் இப்படம் உருவாகிறது.
மும்பையின் முக்கிய இடங்களில் பாலிவுட்டின் சீனியர் ஹீரோ வான அமிதாப் பச்சனுக்கு சில வீடுகள் உள் ளன. அவற்றில் மும்பையின் ஓஷிவரா பகுதி யில் அமைந்துள்ள 'டூப்ளக்ஸ் அபார்ட்மென்ட்' ஒன்றை 83 கோடிக்கு விற்றுவிட்டார். 2021ல் ரூ.31 கோடிக்கு வாங்கிய அந்த இடம் இப்போது இவ்வளவு விலைக்கு விற்பனையாகி உள்ளது. இடம் 5795 சதுர அடி பில்ட் அப் ஏரியாவை கொண்ட, விசாலாமான மாடி மற்றும் ஆறு கார் பார்க்கிங் கொண்டது.