25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Mar 05, 2025

கார்ல இருந்து இறங்கி அடிபட்ட உயிரை காப்பாற்றிய நடிகர் சூர்யா.

ஷூட்டிங் முடிச்சுட்டு நாங்க கார்ல வந்துட்டு இருக்கும்போது ரோட்ல யாருக்கோ ஆக்சிடென்ட் ஆயிருக்கு. சூர்யா டக்குனு கார்ல இருந்து இறங்கி அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருந்தவர தன்னோட கார்ல ஏத்திட்டு பக்கத்துல இருந்த ஹாஸ்பிடலுக்கு (திருப்பதி) அனுப்பி வச்சார். தெரிஞ்ச நண்பர்களுக்கு எல்லாம் போன்பண்ணி 4 டாக்டரை வரவச்சு அந்த நபரை காப்பாற்றிய சூர்யா .

Mar 05, 2025

அஜீத்துடன் நடிக்க விரும்பும்  விஜய்  சேதுபதி!

ரஜினி, கமல்,விஜய் மற்றும் ஷாருக்கான் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த, விஜய் சேதுபதிக்கு, அஜித்துடனும் ஒரு படத்தில் நடிக்க முன்பு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், 'கால்ஷீட்' பிரச்னையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன் காரணமாகவே. 'அஜித்துடன் வில்லனாக நடிக்க வேண்டுமென்றால். இயக்குனர்கள் என்னை தாராளமாக அணுகலாம்...' என, தகவல் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி.

Mar 05, 2025

சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், “சிக்கந்தர்”

சல்மான்கான் நடிப்பில்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், “சிக்கந்தர்” என்ற படத்தில், அழுத்தமான குணச்சித்ர வேடத்தில் நடிக்கிறார், சத்யராஜ்.சவ்ரவ் கங்குலி படத்தில் ராஜ்குமார் ராவ்இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டன் சவுரவ் கங் குலி. இவரது வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக எடுக்க உள்ளனர். அவரது வேடத்தில் ஹிந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள் ளார். இதை கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார். ராஜ்குமார் தற்போது பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பை இன்னும் ஓரிரு மாதங் கள் கழித்து ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளனர். இயக்குனர் உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Mar 05, 2025

30 இந்திய பிரபலங்களின் பட்டியலில் அபர்ணா பாலமுரளி.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் இந்தியாவில் அதிக அளவில் பிரபலமான 30 வயதுக்கு கீழ் உள்ள 30 பேர் கொண்ட பட்டியலை வெளி யிட்டது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் இந்தாண்டுக்காக வெளி யிடப்பட்ட பட்டியலில் நடிகை அபர்ணா பாலமுரளி, 29 மற்றும் பாலிவுட் நடிகர் ரோகித் சரப், 28 ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Feb 26, 2025

  தன்னுடைய கேரவனை வாடகைக்கு விட்ட கமலஹாசன்.

தன்னுடைய கேரவனை பிரதமர் மற்றும் முதல்வருக்கு வாடகைக்கு விட்ட நடிகர் கமல்.7 ஸ்டார் ஹோட்டல் போல காட்சியளிக்க கூடிய இந்த கேரவனில், நான்கு பக்கமும் ஏசி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஏசிகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், அதனை மாற்றுவதற்காக ஸ்பேர் ஏசிகள் உள்ளது.இந்த கேரவனில் 1000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டிருப்பதாகவும் 2 மேக்கப் ரூம்கள் உள்ளது.யாராவது வந்தால் அவர்களுடன் கலந்து பேசுவதற்கு தனியாக மீட்டிங் ஹால் என பல்வேறு வசதிகள் இந்த கேரவனில் உள்ளது.

Feb 26, 2025

 'சங்கராந்திகி வஸ்துனம்' 2ம் பாகம் 2027ல்…..

தெலுங்கில் இந்த பொங்கலுக்கு அனில் ரவிபுடி இயக்கத்தில், வெங்கடேஷ் நடிப்பில் வெளியான படம் 'சங்கராந் திகி வஸ்துனம். ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி நாயகிகளாக நடித்திருந்த இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து பேசிய வெங்கடேஷ், "மீண்டும் சங்கராந்திகி வஸ்துனம் படத்தில் நிகழ்ந்ததை போன்ற அதே மேஜிக்கை, இதன் இரண்டாம் பாகத்தில் நிகழ்த்துவேன்.. வரும் 2027 சங்கராந்தி பண்டிகையில் (ஜன.14) வெளியாகும்" என்றார்.

Feb 26, 2025

பழைய பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்- மீண்டும் 'மதராஸி'-

 சிவ கார்த்திகேயன் தனது 23வது படத்தில் , ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில்  நடித்து வந்தார். நாயகியாக ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கின்றனர். பெயர் வைக்காமலே படப்பிடிப்பு பாதிக்கு மேல் வளர்ந்த நிலையில் ஹிந்தியில் சல்மான் நடிக் கும் சிக்கந்தர் பட வாய்ப்பு வந்ததால் இப்படம் நின்றுள்ளது. தற்போது இந்த படத்திற்கு 'மதராஸி' என பெயரிட்டுள்ளனர். 2006ல் அர்ஜுன் நடிப்பில் இதேபெயரில் ஒரு படம் வந்தது. இதற்குமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் "எதிர் நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன்" ஆகிய படங்கள் பழைய பட தலைப்பில் வந்துள்ளது. இதுதவிர பழைய பட தலைப்பில் சுதா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

Feb 26, 2025

பாட்டிக்காக சாய் பல்லவியின் தேசிய விருது ஆசை

சாய் பல்லவி அளித்த பேட்டியில் எனது திருமணத்தின் போது நான் அணிந்து கொள்ள ஒரு புடவையை எனது பாட்டி பரிசளித்தார். திருமணம் எப்போது நடக்கும் என தெரியாது.சாய் பல்லவி கடைசியாக நடித்த இரு படங்களான அமரன், தண்டேல் வெற்றி பெற்றுள்ளது. அமரன் படத் திற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கலாம் என்கிறார்கள்.. திருமணம் எப்போது நடக்கும் என தெரியாது. அதேசமயம் தேசிய விருது போன்று உயரிய விருது விழாவில் அந்த புட வையை அணிந்து கொள்வது சரியாக இருக்கும். அதற்காகவே எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்கிறார்

Feb 26, 2025

யோகி பாபு  கார் விபத்தில் சிக்கியது. . அதில்  அவர் பயணிக்கவில்லை. தவறான செய்தி பரவுகிறது.

 காமெடி நடிகரான யோகிபாபு, அவர் நடித்து வரும் ஒரு படத்தின் படப் பிடிப்புக்கு செல்கையில் அவரது கார் விபத்துக் குள்ளாகி, அவரும்,உதவியாளரும் காயமடைந்ததாக செய்தி பரவியது. இதனை மறுத்த யோகி பாபு, "எனக்கு விபத்து ஏற்படவில்லை, நலமாக இருக்கிறேன். படப்பிடிப்புக்கு வந்த கார் விபத்தில் சிக்கியது. அதில் நாங்கள் பயணிக்கவில்லை. தவறான செய்தி பரவுகிறது.என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி" என்றார்.

Feb 26, 2025

நிறைவடைந்த'பைசன் காள மாடன்' படப்பிடிப்பு .

நடிகர் விக்ரம் மகன் துருவ்வை வைத்து 'வாழை' படத்திற்கு பின் 'பைசன் காள மாடன்' என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகி றார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள னர். கபடி வீரர் கதைகளத் தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. துருவ் வெளியிட்ட பதிவில் ''பல மாத படப் பிடிப்பு, ரத்தம், வியர்வை,கண்ணீர் கடந்து இறுதியாக பைசன் படப் பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 59 60

AD's



More News