படத்தின் சஸ்பென்ஸ் கடைசி வரை நீடிக்கிறது. இந்த நடிகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்..வெளியிடப்பட்டது: ஜனவரி29, 20252:10PMISTஷான் தாஸ் மூலம்எடிட் செய்தவர் ஷான் தாஸ்நீங்கள் க்ரைம் த்ரில்லர் படங்களின் ரசிகராக இருந்தால், இன்றைய வாட் டு வாட்ச் தொடரில் உள்ள இந்தத் திரைப்படம் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இந்த தென்னிந்தியத் திரைப்படம் உங்கள் மனதை மிகவும் கவர்ந்திழுக்கும் அனைத்து கூறுகளையும் கொண்டுள்ளது, கொலையாளியைப் பிடிக்க முயற்சிப்பதில் ஈர்க்கக்கூடிய மதிப்பீடுகளையும் பெற்றுள்ளது. சிறந்த தென்னிந்திய க்ரைம் திரில்லர்இந்த2 மணி நேரம்18 நிமிட தமிழ் க்ரைம் த்ரில்லர் அதன் கதையில் உங்களை மிகவும் சிக்க வைக்கும், நீங்கள் விடுபடுவது கடினமாக இருக்கும். சதி ஒரு கொலை மற்றும் இரண்டு சந்தேக நபர்களை சுற்றி சுழல்கிறது, ஆனால் உண்மையானகுற்றவாளியார்என்பதைக்கண்டுபிடிப்பதுகாவல்துறையினரிடமிருந்து நிறைய முயற்சிகளை எடுக்கிறது. இறுதியில் அதிர்ச்சியூட்டும் திருப்பம் உங்கள் மனதை உலுக்கும்.ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகளான கவின் மற்றும் எழில் ஆகிய இருவரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது. எழில் சற்றே எளிமையானவர், அதே சமயம் கவின் குறைந்த கல்வியறிவு பெற்றிருந்தாலும், புத்திசாலிகள் கூட அவர் முன் தோல்வியடையும் அளவுக்கு சட்டத்தின் ஆழமான அறிவைப் பெற்றிருக்கிறார்.ஒரு கொலை மற்றும் இரண்டு ஒத்த இரட்டையர்கள்ஒரு நாள், ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலையாளி யார் என்பது தெளிவாகத்தெரியவில்லை. குற்றம் நடந்த இடத்தில் இருந்து ஒரு புகைப்படம் இரண்டு ஒத்த இரட்டையர்களின் முகங்களைக் காட்டுகிறது. கொலையை யார் செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் உறுதியாக உள்ளனர்.படத்தின் இறுதி வரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது ஐஎம்டிபியில் 8.1 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. 2019 இல் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தைYouTube இல் இலவசமாகப் பார்க்கலாம், மேலும் இது OTT இயங்குதளமான Prime Videoவிலும் கிடைக்கிறது.
பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நடித்து 2023லேயே ரிலீஸாக வேண்டிய படம் 'ஆலம்பனா' தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இப்படம் இப்போது மார்ச் 7ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளாக கிடப்பில் கடந்த மதகஜராஜா படம் பொங்கலுக்கு ரிலீஸாகி வெற்றி பெற்றது. இதை யடுத்து கிடப்பில் கிடக்கும் பல படங்கள் ரிலீஸிற்கு தயாராகின்றன.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாக, அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் நடித்துள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் பிப்., 21ல் வெளியாகிறது . ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் டிரைலர் வெளியானது. காதல், காதல் தோல்வி, நண்பர்களுடனான லூட்டி என டிரைலர் கலர்புல்லாக இருக்கிறது. டிலைரின் துவக்கத்தில் வரும் தனுஷ், 'இது வழக்கமான கதை தான்' என்று கூறுபவர் முடிவில் 'ஜாலியா வாங்க, ஜாலியா போங்க' என பேசி உள்ளார். 6 மணிநேரத்திலே 11லட்சம் பார்வைகளை இந்த டிரைலர் கடந்தது.
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அசத்தி வருகிறார். கடந்தாண்டு இவர் நடித்து வெளியான அனிமல் ரூ.900 கோடி, புஷ்பா 2 ரூ.1800 கோடி வசூலை கடந்தன. இவர் நடிப்பில் வெளி வந்த ஹிந்திப் படமான 'சாவா' வெளியான மூன்று நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து அசத்தி உள்ளது. இந்த வெற்றியுடன் சேர்த்து ராஷ்மிகா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார்.
'டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,ஈடாட்டம், பிறந்தநாள் வாழ்த்துகள், பல்லவபுரம் மனை எண் 666" ஆகிய படங்கள் பிப்ரவரி 21ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன், தனுஷ் இயக்கி உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்படங்களுக்குஎதிர்பார்ப்புஉள்ளன. 2025ல்கடந்துபோன 6 வாரங்களில்அதிகபட்சமாக 9 படங்கள் வெளி வந்தன.
'லவ் டுடே' படத்தை இயக்கி, நடித்த பிரதீப் ரங்கநாதன், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன், கையடு லோகர், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன், மிஷ்கின், சினேகா நடித்துள்ள 'டிராகன் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். இப்படம் பிப்.,21ல் ரிலீசாக உள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா நடிப்பில்,சந்து மொன்டேட்டி இயக்க, சாய் பல்லவி நாயகியாக நடித்த பிப்., 7ல் தெலுங்கு, தமிழில் வெளியான படம் 'தண்டேல்'. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்து அசத்தி உள்ளது. நாகசைதன்யா சினிமாவில்அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் முதன்முறையாக இவரது படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.
.பார்க்கிங் ' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இதை இயக்குகிறார். அடுத்து அவரின் 50வது பட அறிவிப்பும் வந்தது. இதை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். அட்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சிம்புவே தயாரிக்கிறார் தற்போது ஓடிடி, சாட்டிலைட் வியாபாரம் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களை சிக்கலில் விடாமல் நானே தயாரிக்க முன்வந்தேன். இதுபற்றி கமல் சாரை சந்தித்து நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன் " என்றார். இதே போல் சிம்புவின் 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாக அறிவித்துள்ளனர். நடிகர் சிம்பு பிறந்தநாளை கொண்டாடினார். அவரது 49வது படஅறிவிப்பு வெளியானது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் நடித்துள்ளார். ஏப்., 10ல் படம் ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்திலிருந்து 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்ற பாடலை புதுமையான முறையில் ரீமிக்ஸ் செய்துள்ளாராம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
துல்கர் சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர். அதை பகிர்ந்து, "இந்த மாதிரி காலத்தால் அழியாத கதையில், கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். 13வது திரைப்பயணத்தில் இது கிடைத்தது எனக்கு மிகப்பெரிய பரிசு" என குறிப்பிடப்பட்டுள்ளார் துல்கர். தெலுங்கு நடிகர் ராணா உடன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து தயாரித்து, நடிக்கும் படம் 'காந்தா'. செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.