தமிழில் இந்தவாரம் 14ல் காதலர் தினத்தில் "2கே லவ் ஸ்டோரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, அது வாங்கினால் இது இலவசம் ஒத்த ஓட்டு முத்தையா, படவா, தினசரி, கண்நீரா, 9 ஏஎம் டூ 9 பிளம் வேலண்டைன்ஸ் டே, பபி அண்ட் பேபி" ஆகிய 10 நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன. இதன் உடன்'கேப்டன் அமெரிக்கா பிரேவ்" நியூ வேர்ல்டு' என்ற ஹாலிவுட் படமும் வெளியாகிறது.
அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிப்., 6ல் வெளியான படம் 'விடாமுயற்சி'. ஆ ஷன் கலந்த கதையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது படம் வெளியாகி 4 நாட்களுக்கு பின் இப்படம் தமிழகத்தில் ரூ.60 கோடி, பிற மாநிலங்களில் ரூ.10 கோடி, வெளிநாடுகளில் ரூ.30 கோடி என ரூ.100 கோடி வசூலை எட்டி உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணியாக வாழ்ந்த கே ஆர் விஜயா 75 ஆண்டு தமிழ் சினிமாவில் சாதித்து சொந்தமாக விமானம் ,கப்பல், ஹோட்டல், தனக்கென புல்லட் வைத்திருந்த முதல் நடிகையும் கடைசி நடிகையும், நம்ம கே ஆர் விஜயா அம்மா அவர்கள் மட்டும்தான். அழகிலும், சிரிப்பிலும் சிறந்து விளங்கியவர் கே ஆர் விஜயா .
இப்படம் கடந்த ஆண்டே வெளிவரும்எனஎதிர்பார்த்தநிலையில், சிலகாரணங்களால்தள்ளிப்போனது.ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி படம் இன்று வெளிவரவுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது..பண்டிகைக்கு படம் வரவில்லை என்றால் என்ன, நம் படம் வரும் நாள்தான் பண்டிகை என அஜித் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் கூறியுள்ளார். அதே போல் பிப்ரவரி 6ம் தேதி கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு பண்டிகைதான் ..இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து மாஸ் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் நடந்து வரும் ப்ரீ புக்கிங்கில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.இதில்தமிழ்நாட்டில்ரூ. 11 கோடி, வெளிநாடுகளில் ரூ. 4.7 கோடி, கர்நாடகாவில் ரூ. 1.7 கோடி, கேரளாவில் ரூ. 30 லட்சம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 30 லட்சம் வசூல் செய்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் நெட்பிலிக்ஸ் தளத்திற்காக எடுக்கப்பட்ட வெப் சீரிஸில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.அக்கா என அந்த சீரிஸுக்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் கீர்த்தி மாஸ் ஆன லுக்கில் நடித்து இருக்கிறார்.அதன் டீசர் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கிறார் .
பிரமாண்ட சரித் திர புராண படம் 'கண் ணப்பா'சிவ பக்தர் கண்ண வாழ்க்கையை தழுவி தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் ருத்ராவாக பிரபாஸ் . விஷ்ணு மஞ்சு நடிக்க, முகேஷ் குமார் சிங் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் காஜல் அகர்வால், மோகன்பாபு ஆகியோர் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன் லால், அக்ஷய் குமார் நடித்து வருகின்றனர். இவர்களுடன் 'ருத்ரா' எனும் வேடத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இவரின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஏப்., 25ல் பன்மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
தமிழகம் வந்துள்ள ரஷ்ய நடன கலைஞர்கள் சென்னையில் ,இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தனர். பின்னர் அவர் இசையமைத்த மீரா படத்தில் வரும்” ஓ பட்டர்பிளை. சொல்ல துடிக்குது மனசு' படத்தில் வரும் “பூவே செம்பூவே.”. இளையராஜா. பாடல்களுக்கு தங்களது நேர்த்தியான ரஷ்யர்கள் நடனத்தால் கவர்ந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்து, "ரஷ்ய நடன கலைஞர்களுக்கு நன்றி. அவர்களின் நடனம் நளினமாக, உணர்வுப்பூர்வமாக, இதயத்தை தொடும் விதமாக வசீகரிக்க கூடியதாக இருந்தது" என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
'விருமாண்டி' படம் மூலம் கமல் இயக்கி, நடித்து பிரபலமானவர் அபிராமி, இவர்அளித்தபேட்டியில் 'விருமாண்டியில் நடித்தசமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் படிக்க அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் கல்லுாரியில் சேர விரும்பினேன். அதற்கு இங்கிருந்து பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந் தால் நன்றாக இருக்கும் என நினைத்து. கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு சிபாரிசு கடிதம் தந்தார். கமலிடமும் கடிதம் கேட்ட.தற்கு அவர் சினிமாவை விட்டு நீ போகக்கூடாது, உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு எனக் கூறி மறுத்தார். விருமாண்டி படம் முடிந்த பின் அந்த கல்லுாரியில் அட்மிஷன் கிடைத்து படிக்க சென்றுவிட்டேன்" என்றார்.
ரஜினி நடித்த “ஜெயிலர்” படம் நெல்சன் இயக்கத்தில் ரூ. 650 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. தற்போது லோகேஷ் இயக்கும் 'கூலி' படத்தில் நடிக்கும் ரஜினி, அடுத்ததாக 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறார். இப்ப டம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் நிலையில் ரஜினியின் முந்தைய படங்களை விட அதிக நாடுகளில் படத்தை வெளியிடும் நோக்கில் ஆங்கில மொழியிலும் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.
ஜவான் படத்தை ஹிந்தியில், இயக்கி வெற்றி பெற்ற. அட்லி, அதன் பின் தமிழில், விஜய் நடிப்பில் இயக்கிய, தெறி படத்தை ஹிந்தியில், பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்த,. படம் தோல்வி அடைந்து விட்டது.அடுத்து, ஹிந்தி நடிகர், சாகித் கபூரை நாயகனாக வைத்து ஒர் ஹிந்தி படத்தை தயாரிக்கப் போகிறார். அட்லி.