சுந்தர் சி இயக்கத்தில் ,தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் , ஏஆர் ரஹ்மான் இசையில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்க 2017ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறி விக்கப்பட்ட சரித்திரப் படம் 'சங்கமித்ரா'. நிதி பிரச்னை யால் 7 ஆண்டுகளாகியும் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது ஆண்டு அடுத்தாண்டு கொண்டாட. 'சங்கமித்ரா' படத்தை மீண்டும் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு,அதற்கான பணிகள் நடக்கின்றன.
மலையாளத்தில் மம்முட்டியை வைத்துஇயக்குனர் கவுதம் மேனன் தற்போது ' இயக்கிய 'டொமினிக்' படம் இந்த வாரம் வெளியாகிறது. கவுதம் மேனன் கூறுகையில், "தமிழில் அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெற்றி மாறன் கதையில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இதில் நாயகனாக ரவி மோகன் நடிக்கபடத்தின் ஆரம்பகட்ட பணி கள் நடக்கின்றன.
பொங்கலுக்கு குடும்பத்தோடு பார்த்து ரசிக்க கூடிய படம் தான் “மதகஜராஜா”.ஒரு படம் இரண்டு மூன்று வருடங்கள் தாமதம் ஆனாலே நிச்சயம் தோல்விதான் என முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் 12 வருடங்கள் கழித்து வெளிவந்தும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது மதகஜராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானத்தின் ஆர்ப்பாட்டத்தில் வெளிவந்த படம்.ஊரில்கேபிள்டிவிஆபரேட்டராகஇருக்கும்விஷால்ஒருதிருமணத்திற்குசெல்கிறார்.அங்குபழையநண்பர்கள்அனைவரும்ஒன்றுசேர்கின்றனர்.அவர்களில் சந்தானம் மனைவியுடன் பிரச்சனையில் இருக்கிறார்.இப்படி ஆளாளுக்கு ஒரு பிரச்சனையில் இருக்க அதை விஷால் தலையிட்டு எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை.இதில் வரலட்சுமி, அஞ்சலி, கேமியா ரோலில் வரும் ஆர்யா என கலகலப்பாக கதையை நகர்த்தி சென்றுள்ளார்.ஆனால் அந்த சந்தேகமே வேண்டாம் என்பது போல் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதிலும் ஆரம்பத்தில் இருந்து சந்தானத்தின் கவுண்டர் காமெடி படத்திற்கு பெரும் பலம்.சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு நேற்று திரைக்கு வந்த படம். விஷால் ''சமீபத்தில் 'மதகஜராஜா'. கூறுகையில், எனக்கு காய்ச்சல் சாதாரணமான தான் இருந்தது. இப்போது குணமாகி விட்டேன். கையெல்லாம் நடுங்கியது. இப்போது அந்த மாதிரி எந்தவொரு நடுக்கமும் இல்லை. மைக் சரியாக தான் பிடித்துள்ளேன். எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.சாகும் வரை உங்கள் அன்பை மறக்க மாட்டேன்" என்றார்.அந்த அளவுக்கு விஷாலுடன்,சந்தானம் காமெடி கூட்டணி ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது. சுந்தர் சி படம் என்றாலே நட்சத்திரங்களுக்கு பஞ்சம் இருக்காது.
துபாயில் நடைபெற்ற 246எச்' கார் ரேஸில் நடிகர் அஜித்தின் அணி, போர்ஷ்சே 991 கப் கார் (எண் 901) பந்தயத்தில் 3வது இடம் பிடித்தது. அத்துடன், ஜிடி4 பிரிவில் 'ஸ்பிரிட் ஆப் தி ரேஸ்' எனும் விருதையும் வென்றது. கார் ரேஸில் பங்கேற்பதற்காக துபாய் சென் றுள்ள நடிகர் அஜித் அளித்த பேட்டி: நான் 2002, 2003, 2004 ஆண்டுகளில் கார் ரேஸில் பங்கேற் றிருக்கிறேன். ஆனால் 2004 தொடரில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. 2010ல் யூரோப்பியன் பார்முலா ரேஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால், இடையில் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்லாமல் உரிமையாளராகவும் வந்துள்ளேன். நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.துபாய் கார் ரேஸில் '24ளர்' சீரிஸில் அஜித் அவரது அணியினர் 3 வது இடத்தைப் பிடித்து சாதித்தனர். துபாயில் ஊட கம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித் "எனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிடிக்கும். அதிக பயணத்தை விரும்புவேன். இவையெல்லாம் என்னை ஊக்குவிக்கும், புத்துணர்ச்சி யாக்கும். என் பிள்ளைகளை யும் கற்றல் உடன் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ளக் கூறுவேன். வெற்றியைவிட தோல்வியே கற்றுக் கொடுக் கும்.அஜித் வெளியிட்ட வீடியோவில், "ரேஸை பார்க்க நிறைய ரசிகர்கள் நேரில் வந்திருந்தனர், எமோஷனலாக இருந்தது. நன்றாகப் படியுங்கள். கடுமையாக உழைத்து வேலை பாருங்கள். மன உறுதி, அர்ப்பணிப்பை எப்போதும் விட்டுத்தராதீர்கள். ப்ளீஸ், 'ச சண்டை போடாதீர்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் குடும்பத்தைப் பாருங்கள்" என ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கை அழகாகும். என் ரசிகர்களே படத்தை பாருங்கள். 'அஜித் வாழ்க, விஜய் வாழ்க' எனக் கூறுகிறீர் கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள். உங்கள்அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் வாழ்க்கையை கவ னியுங்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி" என்றார். இதனி டையே தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை என நெகிழ்ச்சி உடன் அறிக்கை வெளியிட்டார் அஜித், அதோடு, இந்த அன் பும் ஊக்கமும்தான் எனக்கு உந்து சக்தி. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்க கடமைப்பட்டுள் ளேன்" என தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படம் பொங்கலுக்கு வெளியாகி உள்ள நிலையில், இனி ஜெயம் ரவி என்ற பெயரில் என்னை அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என அழையுங் கள். ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி இப்பட ம் தந்த வெற்றியால் ஜெயம் ரவி ஆனார் .மேலும் 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம், புதிய துவக்கத் திற்கு ஆதரவு தாருங்கள்" என தெரிவித்துள்ளார். அடுத்து 'டாடா' பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத் தில் நடிக்கிறார். இதுபற்றி ரவி கூறுகையில், "இது என்னுடைய 34வது படம். அரசியல் சார்ந்த கதையில் உருவாகிறது. வெகுஜன மக்களை கவரக்கூடிய படமாக இருக்கும்" என்றார் ஜெயம் ரவி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழில் இந்தியன் 3, தெலுங்கில் கண்ணப்பா, ஹிந்தியில் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடிக்கும் இவர். இப்போது விவசாயம் மற்றும் பூச்சிக் கொல்லி மருத்து ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகும் 'தி இந்தியா ஸ்டோரி' என்ற புதிய ஹிந்தி படத்தில் நடிக்கிறார். ஷ்ரேயாஸ் தல்படே 3 ஹீரோவாக நடிக்க, சேத்தன் டிகே இயக்குகிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கியவர் விஜய் சந்தர், தற்போது விஜய் சந்தர் அடுத்த படத்திற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலிடம் கதை கூறி யுள்ளார். மோகன்லாலுக்கும் கதை பிடித்து போன தால் அடுத்தடுத்த பணிகள் நடக்கின்றன.
இசை மேதை இளையராஜா. 1500 படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், ஏற்கனவே ஒரு சிம்பொனி இசையை வெளியிட்டு இருந்தார். இப்போது இங்கிலாந்தில் தான் பதிவு செய்தசிம்பொனிஇசையைஜன.,26ல்வெளியிடுவதாகதெரிவித்து,இது தொடர்பாக ஒரு இசை வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பூர்ணா முக்கிய வேடத்திலும்,சிறப்பு வேடத்தில் விஜய் சேதுபதியும் மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித் துள்ள படம் 'பிசாசு 2'. படத்தில் நடித்துள்ளனர். ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகி உள்ள, இந்த படம் முடிந்தும் சில பிரச்னையால் ரிலீஸில் தாமதமாகிறது. இந் நிலையில் 2025, மார்ச் மாதம் எப்படியாவது படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த 'அமரன்' படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்ததாக நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் டி சீரியஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பணிகள் விரைவில் துவங்குகிறது.