உலகம் முழுவதும் வருகிற 27-ந்தேதி திரைக்கு வர இருக்கும் “ஹிட்லர் ”படம் குறித்து இயக்குனர் தனா கூறியதாவது. விஜய் ஆண்டனி என்றாலே மாறுபட்ட நடிப்பு எனலாம். அந்தவகையில் விஜய் ஆண்டனியின் தனித்துவ நடிப்பால் தயாராகியுள்ள புதிய படம் “ஹிட்லர்” பொதுவாகவே ஹிட்லர் என்றாலே சர்வாதிகாரம் என்பார்கள். ஆனால் இந்த" ஹிட்லர் "அதற்கு நேர்மாறாக சர்வாதிகாரத்துக்கு எதிரானவன். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கலக்கி இருக்கிறார். அவரை போலவே கவுதம் மேனனும். சரண்ராஜும், பிரமாதப்படுத்தி இருக்கிறார். Iஇது அட்டகாசமான கமர்ஷியல் படமாகும். அதேவேளை அனைத்து ஜனரஞ்சகமான அம்சங்களும் படத்தில் நிறைந்திருக்கிறது. நடிகர் நடிகைகளின் சிறப்பு மிக்க கவனத்தை ஈர்த்தது இது படத்தின் ரிலிசிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம்.
இந்தாண்டின் செப்டம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான 27ல் விஜய் ஆண்டனி யின் 'ஹிட்லர்', கார்த்தி யின் 'மெய்யழகன்', 'பிரபுதேவாவின் பேட்ட ராப்', சதீஷின் 'சட்டம் என் கையில்' ஆகிய நான்கு தமிழ் படங்கள் வெளியாகின்றன. இவற்றுடன் ஜூனியர் என்.டி.ஆர்., நடித்துள்ள தெலுங்கு படமான 'தேவரா' தமிழிலும் வெளியாகிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப் படம் "காதலிக்க நேரமில்லை". ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற் கொள்கிறார். கடந்த மாதம் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு வாழ்த்து கூறி படக்குழு பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி - வடிவேலு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு கேங்கர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. வடிவேலுலின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு, ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டுள்ளது. கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் இப்படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.ஜெயம் ரவி ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் பிக் பாஸை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ .50 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸை முன்பு தொகுத்து வழங்கிய கமல், படங்களில் நடிக்க இருப்பதை. சுட்டிக்காட்டி விலகினார். இதையடுத்து, கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். கமலுக்கு ரூ .120 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது
கோழிப்பண்ணை செல்லதுரை' ரிலீஸ்சீனு ராமசாமி இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள படம் 'கோழிப் பண்ணை செல்லதுரை'. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக் கின்றன. சில தினங்களுக்கு முன் இதன் டீசர் வெளியானது. எதார்த்த படைப்பாக உருவாகி உள்ள இந்த படம் செப்., 20ல் ரிலீஸாகிறது என சீனு ராமசாமி அறிவித்துள்ளார். 'வேட்டையன்' இசை வெளியீடு ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரி யர் நடிப்பில் தயாராகி உள்ள படம் 'வேட்டையன்'. அக்., 10ல் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத் தில் இருந்து 'மனசிலாயோ' என்ற முதல்பாடலை விரைவில் வெளியி டப் போவதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். அதோடு செப்., 20ல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.மாளவிகாவின் ஹிந்தி படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு . மலையாள நடிகை யான மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தாண்டி பிறமொழிகளிலும் நடிக்கிறார். ஏற்கனவே ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தி ருப்பவர் இப்போது 'யுத்ரா' என்ற படத்தில் நடித்துள்ளார். சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்க, ரவி உத்யவார் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்க்ஷன் கதையில் உருவாகி உள்ள இந்த படம் செப்., 20ல் ரிலீஸ் என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.சட்டம் என் கையில்' ரிலீஸ்நகைச்சுவை நடிகராக இருந்த சதீஷ் சமீப காலமாக நாய் சேகர், கான்ஞ்சுரிங் கண்ணப் பன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்று வருகிறார். அடுத்து சச்சி இயக்கத்தில் 'சட்டம் என் கையில்' எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். வித்யா பிரதீப் நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வரும் சூழலில் செப்., 20ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.'நந்தன் ரிலீஸ்உடன்பிறப்பே படத்திற்கு பின் மீண் டும் சசிகுமாரை வைத்து நத்தன் என்ற படத்தை ஈ.ரா. சரவணன் இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளனர். படப்பி டிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கும் நிலையில் செப்., 20ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர், சென்ட்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் படமாக உருவாகி உள்ளது.
லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது படத்தில் நடித்து வரும் நடிகர்களின் அறிவிப்பை படக்குழுவினர் வெளி யிட்டு வருகின்றனர். அந்தவகையில் தயாளாக மலையாள நடிகர் சவுபின் சாகிர், சைமனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் நடிப்பதை அவர்களின் முதல் பார்வையுடன்' அறிவித்துள்ளனர்.சென்னை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 177-வது படத்துக்கு “கூலி” என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான டைட்டில் அறிமுக விடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.5- 16 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் தங்க கட்டிகளையும் நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து கதவின் இடையிலிருந்து ரஜினியின் கண்கள் தெரிகிறது கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு எதிரிகளை அடித்து துவம்சம் செய்தபடி, உள்ளே வருகிறார் .தங்க நகைகள் மட்டும் கலரிலும் ,மற்றவை ப்ளாக் அன்ட் வொயிட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது.
உலக சினிமா வரலாற்றில் என்டிஆர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர் ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் மட்டும் தான் .
இயக்குனராக இருந்து நடிகராக மாறியதற்காக கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்காமல், சமீப காலமாக நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை ,தேர்தெடுத்து நடித்து வரும் சசிகுமார் என்னும் எதார்த்த நடிகர், “அயோத்தி”, “கருடன்” படத்தை தொடர்ந்து 'நந்தன்" படத்தில் வித்யாசமான லுக்கில் நடிக்கும் சசிகுமார்.