கீர்த்தி சுரேஷ் அரசியல் ஆசை
இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆசை இல்லை,நடிப்பு மட்டும் தான். எதிர் காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் போகலாம்" என்றார்.சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ் ''எனக்கு பிடித்த ஊர் மதுரை. மல்லிப்பூ, மீனாட்சி அம்மன் கோயில் என பிடித்தமான நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த படத்தில் பெண்ணியத்திற்காக போராடும் பெண்ணாக நடித்துள்ளேன். கலாசாரம் என்ற பெயரில் பெண் கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை காட்டி உள்ளோம். ஹிந்தி திணிப்பு பற் றியும் ஆங்காங்கே பேசியிருக்கிறோம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக் காது. முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி உள்ளோம்.
0
Leave a Reply