தமிழ் சினிமாவில் 50 கோடி வசூல் பார்த்த தமிழ் சினிமாவின் முதல் ஹீரோ
தமிழ் திரையுலகில் சமீப காலமாக ரூ.100 கோடி700 கோடி வரை படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால் முன்பெல்லாம் கோடிகளில் வசூல் செய்யும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அந்த வகையில்,2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ.50 கோடி வசூல் பார்த்த நடிகர் ,தரணி இயக்கத்தில்2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒக்கடு திரைப்படத்தை கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர்.விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.திரைக்கதை, வசனம், பாடல், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிற தான் தொலைக்காட்சியில் வெளியானது. அந்த அளவிற்கு இந்த படம் திரையரங்குகளில் நீண்ட நாள் ஓடியது.8 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.50 கோடி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது. அப்போதைய காலகட்டத்தில் ரூ.50 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவில் பிரம்மிக்க வைக்கும் வசூலாக இருந்தது.கில்லி படத்தில் நடித்ததன் மூலம், முதன் முதலில் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூல் பார்த்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார் நடிகர் விஜய்.20 வருடங்கள் கழித்து தற்போது கில்லி படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்320 திரையரங்குகளில் கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply