ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட படமான 'காந்தாரா சாப்டர் 1' முதல்நாளில் ரூ.89 கோடி வசூலித்துள்ளது
'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2ம் பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' படத்தை இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. கடந்த வாரம் ரிலீசான இப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. "முதல் பாக வெற்றியால் எதிர்பார்ப்பு அதிகரித்து, இப்படத்தில் முழு கவனம் செலுத்த முடியாது, என்பதால் 3 ஆண்டுகள் முழுமையாக அர்ப்பணித்து இந்த சாப்டர் 1 படத்திற்காக பணியாற்றினேன்" என்றார் ரிஷப் ஷெட்டி.
‘காந்தாரா சாப்டர் 1' நேற்றுமுன்தினம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் முதல்நாளில் ரூ.89 கோடி வசூலித் துள்ளது. தொடர் விடுமுறையால் இந்த வாரத்திற் குள் 300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. காந்தாரா முதல்பாகம் 400 கோடி வசூலித்த நிலையில் அதைவிட இப்படம் நிச்சயம் கூடுதலாக வசூலிக்கும்.
0
Leave a Reply