நரை முடியை கருப்பாக்க கருவேப்பிலை டை
இன்றைய காலத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை கருப்பாக மாற்றுவதற்காக கெமிக்கல் நிறைந்த எண்ணைகளையும், டையையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் நரை முடி பிரச்சனை ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் நாள் ஆனதும் நரை முடி மீண்டும், வந்து விடும். அதனால் இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
கருவேப்பிலை டை செய்முறை - முதலில் கருவேப்பிலையை எடுத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் கழுவி வைத்த கருவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெய் ஏதும் ஊற்றாமல் வெறுமென வறுக்க வேண்டும்.அதன் பிறகு வறுத்து வைத்த கருவேப்பிலையை பொடியாக அரைத்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும். இதனுடன் வைட்டமின் ஈ மாத்திரையின் ஜெல்லை 1 சேர்த்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். தண்ணீரை அதிகமாக ஊற்ற வேண்டாம். மிக்ஸ் செய்யும் போது டை பதத்திற்கு வர வேண்டும்.
அப்ளை செய்யும் முறை - செய்து வைத்துள்ள டையை கையில் கிளவுஸ் அணிந்து அதன் மூலம் டையை எடுத்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து விட்டு அலசி விட வேண்டும். இது போல் நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து 1 மாதத்திற்கு அப்ளை செய்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.
கருவேப்பிலையை வைட்டமின் சி, புரத சத்து, கால்சியம், அயன், கெரோட்டின் போன்றசத்துக்கள்நிறைந்துள்ளது,இந்தசத்துக்களானது முடி உதிர்வை தடுத்து முடி வளர உதவி செய்கிறது. மேலும் நரை முடியை கருப்பாக மாற்றவும் உதவி செய்கிறது.
0
Leave a Reply