இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது.
பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கையில், நவி மும்பையில் நடந்த 2வது அரையிறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127*), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89) கைகொடுக்க, இந்திய அணி (341/5, 48.3 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை (338/10, 49.5 ஓவர்) வென்றது.
பெண்கள் ஒருநாள் போட்டி அரங்கில் இந்திய அணி, அதிக ரன்னை 'சேஸ்' செய்து வரலாறு படைத்து,3வது முறையாக (2005, 2017, 2025) பைனலுக்கு முன்னேறியது. நாளை, நவி மும்பையில் நடக்கவுள்ள பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் ஜெமிமா 'மேஜிக்' பேட்டிங் தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய பெண்கள் அணிக்கு, சச்சின், கும்ளே, யுவராஜ், கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்தனர்.
0
Leave a Reply