சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) சார்பில்,டாப்-10' தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா .
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா (814 புள்ளி), 2 இடம் முன்னேறி, முதலிடம் பிடித்தார்.
17 புள்ளியை இழந்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (811) 2வது இடம் பெற்றார். 9 இடம் முன்னேறிய இந்தியாவின் ஜெமிமா (658), ,டாப்-10' பட்டியலில் இடம் (10 வது) பிடித்தார்.இந்தியாவின் தீப்தி (657), பவுலர் தரவரி சையில் 5வது இடத்தில் நீடிக்கிறார்.
ஐ.சி.சி., சார்பில் பெண்கள் உலக கோப்பை கனவு அணி வெளியிடப்பட்டது. இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த ஹர்மன்பிரீத் கவுருக்கு இடமில்லை.
இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்தி சர்மா என மூவர் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் லாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
0
Leave a Reply