டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் 'நம்பர்-1' .
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், 11500 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.
பிரான்சில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் ஒற்றையர் பைனலில் அசத்திய சின்னர் 6-4, 7-6 என கனடாவின் பெலிக்ஸ் அகுர்- அலியாஸ்சிமியை வீழ்த்தினார்.நடப்பு சீசனில் 5வது பட்டம் வென்ற இவர், ஒட்டுமொத்தமாக 23வதுகோப்பை வென்றார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11250 புள்ளி) 2வது இடத்துக்கும் ,நோவக் செர்பியாவின் ஜோகோவிச் (4580) 5வது இடத்தில் நீடிக்கிறார்.
0
Leave a Reply