25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவின் தனுஷ் (10 மீ., 'ஏர் ரைபிள்') காது கேளாதோர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் தனுஷ் (10 மீ., 'ஏர் ரைபிள்') காது கேளாதோர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்.

காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் ('டெப்லிம்பிக்ஸ்') 25வது சீசன்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்,  ஆண்களுக்கான துப்பாக்கி  சுடுதல் தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் தனுஷ். ஸ்ரீகாந்த் (630.6 புள்ளி), முகமது முர்டசா வானியா (626.3) முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.அடுத்து நடந்த பைனலில் தனுஷ், 252.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். “டெப்லிம்பிக்ஸ்' வரலாற்றில் தனுஷ் கைப்பற்றிய 3வது தங்கம்.

இவர், 'டெப் லிம்பிக்ஸ்' (630.6), 'டெப் பைனல்' (252.2) உலக சாதனைகளைமுறியடித்தார். இன்று நடக்கவுள்ள கலப்பு அணிகளுக்கான பிரிவில் சகவீராங்கனை  மஹித் சாந்துவுடன் இணைந்து, 'டெப்லிம் பிக்ஸ்' அரங்கில்தனது 4வது தங்கத்தை தனுஷ் கைப்பற்றலாம்.இரண்டாவது இடம் பிடித்த முர்டசா (250.1) வெள்ளி வென்றார்.

மஹித் சாந்து'பெண்களுக்கான தனி நபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின்(623.4), கோமல் மிலிந்து வாக்மேர் (622.0) முறையே 2, 3வது இடம்பிடித்து மஹித் சாந்து வெள்ளி வென்றார். கோமல் வாக்மேர் (228.3) வெண்கலத்தை கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News