1000 ஆண்டு பழமையான மாய்ஸ்ச்சரைஸர் நெய்( ஷதா தௌத க்ரிதா )
1000 ஆண்டு பழமையான மாய்ஸ்ச்சரைஸர் நெய்( ஷதா தௌத க்ரிதா )nai
நெய் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்துக்கும் நல்லது. நாம் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் நெய்யை முகத்திற்கு மாய்ஸ்ச்சரைஸராகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக நெய்யை 100 முறை கழுவி எடுத்து, இறுதியில் கிடைக்கும் க்ரீமை முகத்தில் அப்ளை செய்திருக்கிறார்கள். இதற்கு சதா தௌத க்ரிதா என்று பெயர். இது மார்க்கெட்டுகளில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது....
விதவிதமான மாய்ஸ்ச்சரைஸர்கள். நிரந்தரமான பயன்களைத் தருவதில்லை.. அப்ளை செய்யும்போது மட்டும் சருமம் ஹைட்ரேட்டிங்காக இருக்கிறது. சிறிது நேரத்திலேயே வறட்சி அடைந்து விடுகிறது. ஆனால் நெய் அப்படியல்ல. சருமத்தை நாள் முழுமைக்கும் மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.
ஷதா தௌத க்ரிதா (Shata Dhauta Ghrita) செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
நெய் - 100 கிராம்,
தண்ணீர் - 1 கப்,
மஞ்சிஸ்டா பொடி - 1 ஸ்பூன்,
அதிமதுரம் - 1 ஸ்பூன்,
துளசி பொடி - கால் பூன்,
செம்பு தாம்பலம் - 1
செம்பு டம்ளர் - 1
செய்முறை
செம்பு தாம்பலத்தைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சிஸ்டா பொடி, அதிமதுரப் பொடி, துளசி பொடி மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
செம்பு தாம்பலத்தில் நெய்யை ஊற்றிக் கொண்டு, கலந்து வைத்திருக்கும் நீரில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து நெய்யில் விட்டு, செம்பு டம்ளரைக் கொண்டு வட்ட வடிவில் நன்குதேய்க்க வேண்டும்.
ஊற்றிய தண்ணீரை நெய் முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறது அடுத்த ஸ்பூன் தண்ணணீரை ஊற்றித் தேய்க்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து 100 முறை நெய்யை அந்த தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும். 100 முறை கழுவி எடுத்த பின், ஸ்மூத்தான மாயஸ்சரைஸர் க்ரீம் கிடைக்கும். நெய் முழுசாக க்ரீமாக மாறியிருக்கும்.
இதுதான் நெய்யை 100 முறை கழுவினால் கிடைக்கும் Shata Dhauta Ghrita என்னும் ஆயிரங்காலத்து பழமையான மாயஸ்ச்சரைஸர்.
பயன்படுத்தும் முறை
முகத்தை சுத்தம் செய்து விட்டு, நேரடியாக மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவது போல இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.நாள் முழுக்க சருமத்தை மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.குழந்தைகளுக்குக் கூட இந்த க்ரீமை பயன்படுத்தலாம்.அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, இந்த எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.
இந்த க்ரீமை சருமத்தில் அப்ளை செய்யும் சருமத்தில் இருக்கிற7 வகை லேயர்களுக்கு உள்ளேயும் ஊடுருவிச் செல்லும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். குறிப்பாக இதிலுள்ள ஒமேகா3, ஒமேகா9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், நுண்ணிய கோடுகள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்கும். வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, இந்த எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.இயற்கையான சன் ஸ்க்ரீன்,கருவளையங்களை போக்கும்.பரு, தழும்புகளை போக்கும்.வயதாவதை தடுக்கும்.சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.
0
Leave a Reply