ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பளுதுாக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மகாராஜன் ஆறுமுகபாண்டியன்.
ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமாநகரில், ஆண்களுக்கான 60 கிலோ பளுதுாக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் மகாராஜன் ஆறுமுகபாண்டியன் 1 16, பங்கேற்றார்.
'ஸ்னாட்ச்' பிரிவில் 114, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 142 என, ஒட்டுமொத்தமாக 256 கிலோ பளுதுாக்கிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.இவர், 'ஸ்னாட்ச்' பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
எட் வினா ஜான்சன், தன்னு, ஷவுர்யா, பூமிகா அடங்கிய இந்திய அணி, பெண்களுக்கானமெட்லே' தொடர் ஓட்டத்தின் பைனலில், இலக்கை 2 நிமிடம், 09.65 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
இந்திய அணி ஆண்களுக்கான 'மெட்லே' தொடர் ஓட்டத்தில் (ஒருநிமிடம், 59.96 வினாடி) 5வது இடம் பிடித்தது.
இதுவரை 3 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம், என மொத்தம் 24 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply