25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Sep 12, 2025

ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்.

 தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் டில்லியில்,பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியின் சத்யன் ஞானசேகரன், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 4–1 (11-5, 11-8, 11-13, 11-7, 11-9) என மேற்கு வங்கத்தின் அங்கூரை வென்று சாம்பியன் ஆனார்.ரிசர்வ் வங்கி அணியின் தியா, பெண்கள் ஒற்றையர் பைனலில் ரயில்வே அணியின் சுதிர்தாவை 4-0 (11-9, 11-7, 11-9, 11-6) என சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.தமிழகத்தின் ஹன்சினி 'யூத்' (19 வயது) பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 4-0 (11-4, 11-3, 14-12, 11-4) என மகாராஷ்டிராவின் ஜெனிபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Sep 12, 2025

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் வைஷாலி, முதலிடத்தில் நீடிக்கிறார்.

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் 'டாப்-2. இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.பெண்கள் பிரிவில் வைஷாலி, வந்திகா, ஹரிகா உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இதன் 7 வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இந்தியாவின் வைஷாலி, சீனாவின் குவோ குயியை சந்தித்தார். வைஷாலி, 30 வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 7 சுற்று முடிவில் 6.0 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பங்கேற்கின்றனர்.திவ்யா, செர்பிய வீரர் வெளிமிர் இவிச்சை சந்தித்த திவ்யா, 49வது நகர்த்தலில் வென்றார்.மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் மேக்சிமை வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால்சரின், ஈரானின் பர்ஹாமை வென்றார்.7 சுற்று முடிவில் ஜெர் மனியின் மத்தியாஸ் (5.5), நிஹால் சரின் (5.5) முதல் இரு இடத்தில் உள்ளனர். 

Sep 12, 2025

ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் .

ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று, அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், ஹாங்காங்அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. வங்கதேச அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

Sep 12, 2025

ஹாங்காங் பாட்மின்டனில் லக்சயா காலிறுதிக்கு  முன்னேறினார்.

ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பிரனாய் ('நம் பர் -34), லக்சயா சென் ('நம்பர்-20') மோதினர்.முதல் செட்டை பிரனாய் 21-15 என கைப்பற்றினார். பின் நடந்த இரண்டாவது செட்டை லக்சயா 21-18 என வென்றார். மூன்றாவது, கடைசி செட்டிலும் லக்சயா (21-10) முடிவில் 15-21, 21-18, 21-10 என போராடி வென்று காலிறுதிக்கு  முன்னேறினார். 

Sep 12, 2025

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பூஜா, ஜாஸ்மின், அரையிறுதிக்கு முன்னேறினர்.

உலக குத்துசண்டை சாம்பியன் ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் ,இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள்பங்கேற்கின்றனர்.பெண்களுக்கான 80 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி, போலந்தின் எமிலியா கோடர்ஸ்காவை சந்தித்தார்.இருவரும் சம பலத்தில் மோதி, பூஜா 3-2 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் மமஜொனோ வாவை ,இந்திய வீராங்கனை ஜாஸ்மின் (57 கிலோ), எதிர்கொண்டார்.ஜாஸ்மின், 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.நுபுர் ஷியோரன், பூஜா, ஜாஸ்மின் என மூன்று வீராங்கனைகள் குறைந்த பட்ச பதக்கத்தை உறுதி செய்தனர்.

Sep 11, 2025

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து இந்தியா வெற்றி பெற்றது.

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து சவுதி அரேபியாவில், 7வது சீசன் (2026, ஜன. 7-25) தகுதிச் சுற்றில், 44 அணிகள், 11 பிரிவுகளாக பங்கேற்றன.'எச்' பிரிவு லீக் போட்டி யில் கத்தார் தலைநகர் தோகாவில் இந்தியா, புருனேஅணிகள் மோதின. இந்திய அணிக்கு விபின் மோகனன், (5, 8, 62வது நிமிடம்)கோல் அடித்தார். முகமது அய்மன் (87, 90+7) இரண்டு கோல் அடித்தார். ஆயுஷ் தேவ் செத்ரி (42) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Sep 11, 2025

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நுபுர் ஷியோரன் அரையிறுதிக்கு முன்னேறினார். 

உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர்  இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நுபுர் ஷியோரன், உஸ்பெகிஸ்தானின் சோடிம்போயவா ஆல்டினாயை ,நுபுர் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து உலகசாம்பியன் ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.இந்திய வீரர் ஜடுமானி, 'ரவுண்டு-16' போட்டியில் பிரிட்டனின் ரீஸ் ரெட் ஷாவை ஜடுமானி 5-0 என்ற கணக்கில் ஒரு மனதாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.இந்திய வீராங்கனை மீனாட்ஷி 48 கிலோ எடைப்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் ,5-0 என சீனாவின் வாங் குயு பிங்கை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

Sep 11, 2025

ஆசிய கோப்பை 'டி-20'  கிரிக்கெட் தொடர் இந்திய அணி வெற்றி ..

ஆசிய கோப்பை 'டி-20'  கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியா, இலங்கை உட் பட 8 அணிகள் பங்கேற்கின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் உலக சாம்பியன் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பீல்டிங் தேர்வு செய்தார். 13.1 ஓவரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 57 ரன்னில் சுருண்டது. இந்திய அணி 4.3 ஓவரில் 60/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Sep 10, 2025

விளையாட்டு போட்டிகள் பாட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ்.

கலப்பு இரட்டையர் வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் கருணாகரன், ஆத்யா ஜோடி 21-12, 21-11 என்ற நேர் செட்டில் இந்தியாவின்இஷான், ஆராதனா ஜோடியை வென்றது.ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர்சீனாவின் குவாங்சுவில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்,1-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் நிதேஷிடம் வீழ்ந்தார். டில்லியில் தேசிய டேபிள் டென்னிஸ் தொடர் இன்று ஆண்கள் பிரிவில் 256 பேர் பங்கேற்க உள்ளனர். தேசிய சாம்பியன் மனுஷ் ஷா விலகியதை அடுத்து, அன்குர் பட்டாச்சார்ஜீக்கு 'நம்பர்-1' அந்தஸ்து கொடுக்கப்பட்டது. 128 பேர் பெண்கள் பிரிவில் களமிறங்குகின்றனர். 'நம்பர்-1' வீராங்கனையாக  தியா சிட்டாலே களமிறங்குகிறார்.

Sep 10, 2025

இந்தியாவின் நிஹாத் ஜரீன் குத்துசண்டை உலக சாம்பியன்ஷிப்பில் காலிறுதிக்கு முன்னேறினார்.

 உலக குத்துசண்டை சாம்பியன் ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில், இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.இந்தியாவின் நிஹாத் ஜரீன், ஜப்பானின்  நிஷினகா யுனாவை பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நிஹாத், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்காட்லாந்தின் ஹிக்கேயிடம்  இந்திய வீராங்கனை நீரஜ் போகத் (65 கிலோ), 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

1 2 ... 72 73 74 75 76 77 78 ... 137 138

AD's



More News