25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூட்டு வலியை போக்க சிறந்த உணவுகள்.

மூட்டு வலி பலருக்கும்40 வயதை தாண்டிவிட்டாலே வந்து விடுகிறது. முட்டி தேய்ந்து விடுவதால்60 வயதை தாண்டிய பலருக்கும் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படுகிறது. இதற்காக பல லட்சத்தை கூட செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மூட்டு வலி வராமல் இருக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களான சால்மன், மத்தி போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
இஞ்சி, மஞ்சள், பூண்டு நட்ஸ் விதைகள் மற்றும் விட்டமின் சி நிறைந்த பழங்கள் நல்லது.அதேபோல் ஆலிவ் எண்ணெய், பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம் நிறைந்த பால் கலந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.. இவை அனைத்தும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அதேபோல் பீன்ஸ், எலும்பு சூப் ஆகியவையும் மூட்டுக்கு நல்லது.குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்கள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

பெர்ரிகள், கீரை, கேல் என்று அழைக்கப்படும் பரட்டைக்கீரை, குடைமிளகாய் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ளன. இவை மூட்டு திசுக்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கின்றன. எனவே, தினமும் பழங்களின் கலவை அல்லது காய்கறிகளை எடுத்துக் கொள்வது மூட்டுகளின் நெகிழ்வை பாதுகாக்க உதவும்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மூட்டுகளுக்கான இயற்கையான மெழுகாக செயல்படுகிறது. அதாவது, தண்ணீர் குடிப்பது மூட்டுகளை மென்மையாக்கி, இயக்கத்தைக் கடினமாக்குவதை தடுக்கிறது.

இடுப்பு, முழங்கால் போன்ற உடல் எடையை தாங்கும் மூட்டுகளில் அழுத்தம் குறைய இது அவசியமாகும். ஆரோக்கியமான உடல் எடை என்பதும், மூட்டு வலியைத் தடுக்க உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *