சர்வ தேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ,ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் லக்சயா சென், ('நம்பர்-20'), உலகத் தர வரிசை யில் 'நம்பர்-4' ஆக உள்ள, சீனாவின் ஷி பெங்லியை எதிர் கொண்டார். லக்சயா முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 10-10 சமநிலையில் இருந்து, முடிவில் 15-21 என செட்டை இழந்தார்.இரண்டாவதுசெட்டிலும் துவக்கத்தில் இருந்து பின்தங்கிய லக்சயா,. முடிவில் 15-21, 12-21 லக்சயா என்ற நேர் செட்டில் தோல்வி யடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சீனாவின் வெய் கெங் லியாங், சங் வாங் ஜோடியை ஆண்கள்இரட்டையர் பிரிவு பைனலில் சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 19-21 என கைப்பற்றியது .அடுத்த செட்டை 14-21 என நழு வவிட்டது. முடிவில் இந்திய ஜோடி 21-19, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்க, இரண்டாவது இடம் பெற்றது.
உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில், இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 21, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியாவை 57 கிலோ பிரிவு பைனலில் எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார் ஜாஸ்மின். மூன்று சுற்று முடிவில், 5 நடுவர்களில் 4 பேர் ஜாஸ்மினுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர்.முடிவில் ஜாஸ்மின் 4-1 என (30-27, 29-28, 28-29-29-28) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றி, உலக சாம்பியன் ஆனார்.இந்தியாவின் மீனாட்சி ஹூடா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மூன்று முறை உலக சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் நஜிம் கைஜய்பேவை ,பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பைனலில் எதிர்கொண்டார். இதில் மீனாட்சி, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, புதிய சாம்பியன் ஆனார்.இந்தியாவின் நுபுர் ஷியோரன், போலந்தில் அகட்டாவை பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு பைனலில் சந்தித்தார். இதில் சமமான போட்டியை வெளிப்படுத்தியபோதும், நுபுர் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் பூஜா, பாரிசின் எமிலி அஸ்குய்த்தை80 கிலோ பிரிவு அரை யிறுதியில் ,பூஜா 1-4 என தோல்வியடைந்து, வெண்கலம் கைப்பற்றினார்.
உலக தடகள சாம்பியன் ஷிப் இரு ஆண்டுக்கு ஒருமுறை 'உலக தடகள அமைப்பு சார்பில் 1983 முதல், நடத்தப்படுகிறது. இதன் 20வது சீசன் இன்று ஜப்பானின், டோக்கியோ தேசிய மைதானத்தில் துவங்குகிறது.உலகின் 198 நாடுகளில் இருந்து 2202 வீரர், வீராங்கனைகள் காத்திருக்கின்றனர். 49 போட்டிகளில் 149 பதக்கம் வழங்கப்பட உள்ளன.இந்தியா சார்பில் இம்முறை 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் களமிறங்குகின்றனர். இதில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா மீது நம்பிக்கை காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பின் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை, கடந்த 2021ல் டோக்கியோ மண்ணில்வென்று தந்தார்.
சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ஆண்கள் இரட்டையர் காலிறுதியில்இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரிப் ஜூனைதி, ராய் கிங் யாப் ஜோடியை எதிர் கொண்டது. சிராக்முதல் செட்டை 21-14 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 20-23 என போராடி இழந்து, மூன்றாவது கடைசி செட்டை இந்திய ஜோடி 21-16 என வென்றது.64 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 21-14, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
உஸ்பெகிஸ்தானில்'கிராண்ட்சுவிஸ்' செஸ்தொடரில் 'டாப்-2'இடம்பெறும் வீரர், வீராங்கனைகள்,2026ல்நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.நேற்று எட்டாவது சுற்று போட்டி நடந்தன. ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா என இருவரும் மோதினர்.குகேஷ், 46 நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் நீடித்தனர்.47 வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, திவ்யா முந்தினார். 103வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், 'ரிகர்வ்' பிரிவு 'ரவுண்டு - 16' தென் கொரியாவில் நடந்த போட்டியில் இளம் இந்திய வீராங்கனை கதா (15 வயது), 0-6 என்ற கணக்கில் உலகின் 'நம்பர்-1' தென் கொரியாவின் லிம் சி-ஹியோனிடம் தோல்வியடைந்தார். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு சீனாவில்நடக்கும் தகுதிச் சுற்றில் 6வது இடம்பிடித்த இந்தியாவின் பவேஷ் ஷெகாவத், பைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர்-4' சீனாவில் நடக்கும் போட்டியில் இன்று இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன . இதில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி பைனலுக்கு முன்னேறலாம்.
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் டில்லியில்,பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியின் சத்யன் ஞானசேகரன், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 4–1 (11-5, 11-8, 11-13, 11-7, 11-9) என மேற்கு வங்கத்தின் அங்கூரை வென்று சாம்பியன் ஆனார்.ரிசர்வ் வங்கி அணியின் தியா, பெண்கள் ஒற்றையர் பைனலில் ரயில்வே அணியின் சுதிர்தாவை 4-0 (11-9, 11-7, 11-9, 11-6) என சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.தமிழகத்தின் ஹன்சினி 'யூத்' (19 வயது) பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 4-0 (11-4, 11-3, 14-12, 11-4) என மகாராஷ்டிராவின் ஜெனிபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் 'டாப்-2. இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.பெண்கள் பிரிவில் வைஷாலி, வந்திகா, ஹரிகா உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இதன் 7 வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இந்தியாவின் வைஷாலி, சீனாவின் குவோ குயியை சந்தித்தார். வைஷாலி, 30 வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 7 சுற்று முடிவில் 6.0 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பங்கேற்கின்றனர்.திவ்யா, செர்பிய வீரர் வெளிமிர் இவிச்சை சந்தித்த திவ்யா, 49வது நகர்த்தலில் வென்றார்.மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, இஸ்ரேலின் மேக்சிமை வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால்சரின், ஈரானின் பர்ஹாமை வென்றார்.7 சுற்று முடிவில் ஜெர் மனியின் மத்தியாஸ் (5.5), நிஹால் சரின் (5.5) முதல் இரு இடத்தில் உள்ளனர்.
ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று, அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், ஹாங்காங்அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. வங்கதேச அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பிரனாய் ('நம் பர் -34), லக்சயா சென் ('நம்பர்-20') மோதினர்.முதல் செட்டை பிரனாய் 21-15 என கைப்பற்றினார். பின் நடந்த இரண்டாவது செட்டை லக்சயா 21-18 என வென்றார். மூன்றாவது, கடைசி செட்டிலும் லக்சயா (21-10) முடிவில் 15-21, 21-18, 21-10 என போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.