25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செப்டம்பர் 2024 பௌர்ணமி  திருவண்ணாமலை கிரிவலம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செப்டம்பர் 2024 பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்

இந்தஆண்டு செப்டம்பர் மாதம் "பௌர்ணமியானது செப்டம்பர் 17ம் தேதி வருகிறது. செப்டம்பர் 17ம் தேதி காலை 11.22 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 18ம் தேதி காலை 09.10 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது. செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்கிழமை, இந்த ஆண்டு புரட்டாசி மாத பிறப்பாகவும் அமைந்துள்ளதால் கூடுதல் சிறப்புடையாக அமைந்துள்ளது. பௌர்ணமி என்பதால் சிவனையும், சத்ய நாராயணரையும், புரட்டாசி முதல் நாள் என்பதால் பெருமாளையும், செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமானையும் இந்த நாளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். பொதுவாக மாதப் பிறப்பு மற்றும் பௌர்ணமியில் கிரிவலம் செல்வதால் மற்ற நாட்களில் கிரிவலம் செல்வதை விட அதிக பலன் கிடைக்கும் என்பார்கள். இந்த ஆண்டு இரண்டும் இணைந்து வருவதால் இந்த நாளில் கிரிவலம் செல்வது இரட்டிப்பு பலனை தரும்.

நினைத்தாலே முக்தியை தரக் கூடிய திருத்தலம் திருவண்ணாமலை, உலகின் பல மூலைகளில் இருக்கும் சித்த புருஷர்களையும், ஞானிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கும் ஆன்மிக தலம் திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் இந்த தலம் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும், ஆன்மிக சிறப்புகளையும் தன்னுக்குள் அடக்கி வைத்துள்ளது. இங்கு சிவனே மலையாக வீற்றிருப்பதால் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பான வழிபாடாகும். அருணகிரி நாதர் முதல் ரமண மகரிஷி வரை ஆயிரக்கணக்கான ஆன்மிக சான்றோர்களை போற்றி கொண்டாடும் திருத்தலம் திருவண்ணாமலையாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News