இந்தியக் குடியரசு நாள்
இந்தியக் குடியரசு நாள் (RepublicDay ofIndia) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம்1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்1930 ஆம் ஆண்ட இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூற சனவரி26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்:
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."12ஆம் நாள் டிசம்பர் மாதம்1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை1947 நவம்பர்4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள்,11 மாதங்கள்,18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி24ஆம் நாள்1950 ஆம் ஆண்டு308 நாடாளுமன்றஉறுப்பினர்களின் ஒப்புதலுடன்ஆங்கிலம்மற்றும்இந்திமொழியில்கையால்எழுதப்பட்டநிரந்தரஅரசியலமைப்புகையெழுத்திடப்பட்டது.அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து,1950ஆம் ஆண்டில் சனவரி26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது
0
Leave a Reply