25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


தலைமுடி   நன்றாக வளர இயற்கையான ஷாம்பூ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தலைமுடி நன்றாக வளர இயற்கையான ஷாம்பூ

 நன்றாகதலைமுடி வளர, ஒரு பங்கு சீயக்காய், 1/4 பங்கு வெந்தயம், 1/2 பங்கு பச்சைப் பயிர், புங்கங்காய் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை நன்றாக ஊறவைத்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து கூந்தல் ஷாம்பாக பயன்படுத்தலாம்.ரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்தி,  முடி வளர ஆரம்பிக்கும்.

காயவைத்த செம்பருத்தி பூ ,ஆலமரத்தின் வேரைப்பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.வெங்காயத்தையும், முட்டைகோசையும் பொடிப்பொடியாக நறுக்கி இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலை செம்பு பாத்திரத்தில் வைத்து சிறிது யூடிகோலன் சேர்த்தால்வெங்காயம் வாசனை நீங்கிவிடும்.இந்த சாறுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சீயக்காய் பொடி போட்டு தலை குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும், மிகவும் மென்மையாகவும் காணப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News