25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தொப்பை குறைந்து ,வெயிட் குறைய சீரான உணவுகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொப்பை குறைந்து ,வெயிட் குறைய சீரான உணவுகள்

உடற்பயிற்சி + உணவுப்பழக்கத்தின் மூலம் மட்டும் அல்ல. தங்கள் உடல் எடையை சீராக பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர், தினமும் காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆய்வு சொல்கிறது.காலை உணவு சரியாக இருந்துவிட்டால், அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலும், சுறுசுறுப்பும், சத்துக்களும் நமக்கு கிடைத்துவிடும்., உடலில் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை தரக்கூடியது இந்த வைட்டமின் C அதிகமுள்ள உணவுகள்தான். வைட்டமின் C, மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை.. கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், செரிமானத்துக்கும் உதவி புரிகிறது..

 உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை போன்றவற்றில் வைட்டமின் C அதிகம் நிறைந்திருக்கின்றன.பால், தயிர், பாலாடைக்கட்டிகள் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச்சத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்குத் தேவையான சக்திகள் கிடைக்கின்றன.. அதேபோல ஒரு தக்காளி பழத்தையாவது சாப்பிடுவதால், வைட்டமின் C ஓரளவு பெற முடியும்..

 ஓட்ஸ் உணவுகளில் கலோரிகள் குறைந்த கார்போ ஹைட்ரேட்டுகள், பீட்டா குளூக்கன் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கொழுப்பின் அளவை குறைக்கிறது.. சாதாரண ஓட்ஸையே வாங்கி, வேக வைத்து, அதில் தேன், பால், நட்ஸ்களை சேர்த்து சாப்பிட்டாலே போதுமான சத்துக்கள் கிடைக்கும். வெறும் ஓட்ஸிலேயே சிறிது காய்கறிகளை வேகவைத்து உப்புமா போலவும் சாப்பிடலாம்.அரிசி அவல்களைவிட, கோதுமை அவல்களில் நிறைய சத்துக்கள் உள்ள து.  இந்த அவல்களில் டிபன் செய்து சாப்பிடுவதால் நல்ல எனர்ஜி கிடைக்கிறது. இப்படி காலை உணவுகளில் எது சாப்பிட்டாலும் இவைகளுடன் சேர்த்து, கிரீன் டீ ஒன்று குடிக்கலாம்.. காலை உணவை சரியாக எடுத்து கொள்ள முடியாத சூழலில், வேகவைத்த முட்டை அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம்,

 வெறும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சீரகம், பெருஞ்சீரகம், பட்டைத்தூள், சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கலாம்.. அல்லது ஒரு ஸ்பூன் ஓமத்தை, தண்ணீரில் கலந்து, கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தாலும் தொப்பை கரையும்.. எலுமிச்சம் சாறு + இஞ்சி கலந்து தண்ணீர் குடிக்கலாம்..இறைச்சி சாப்பிட்டபிறகு, அரை மணிநேரம் கழித்து, சிறிது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள புரதச்சத்து முழுவதும் ஊறச்செய்து, செரிமானம் ஆகிவிடும்..

கொய்யா இலையில் கசாயம் போல செய்து குடிக்கலாம்.. டீ போட்டுக் குடிக்கலாம்.. இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறையும். கெட்ட கொழுப்புகள் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும். உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.. கொய்யாக்காயையும் தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News