உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிக் நகரில் பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் இளவேனில், 635.9 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார். இது புதிய தேசிய சாதனை ஆனது. இந்தியாவின் மற்ற வீராங்கனைகள் ரமிதா (632.6) 13, அனன்யா (632.4) 15, மேஹனா (631.0) 25வது இடம் பிடித்து வெளியேறினர்.பைனலில் 231.2 புள்ளி எடுத்த இளவேனில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார்.ஆண்களுக்கான 10 6. ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் ராவத், 582 புள்ளியுடன் 5வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply