பாதம் - வெடிப்பு ( சேற்றுப்புண் )காணாமல் போக
பாதம்- வெடிப்பு காணாமல் போக கால் டம்ளர் நீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூளை குழைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போதே சேற்றுப்புண் மீது தடவி கொள்ள வேண்டும். இரவு முழுவதும் காய்ந்தால் மறுநாளே இந்த புண் ஓரளவு மட்டுப்படும்.
விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து, உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால்,பாதங்களில் வறட்சி. மறை ந்து விடும்..கலவையை வெதுவெதுப்பாக பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும்.. வெடிப்பு காணாமல் போய்விடும்
கால் விரல் இடுக்குகளில் வரக்கூடிய புண்கள் தான் சேற்றுப்புண் என்று அழைக்கப்படுகிறது. மண்களில் மழைக்காலங்களில் சேறு சகதிகள் இருக்கும் இடங்களில் பாக்டீரியாவும் நுண்கிருமிகளும் இருக்க கூடும். இந்த இடங்களில் நீண்ட நேரம் நிற்கும் போது, அல்லது இவை கலந்திருக்கும் நீரில் நீண்ட நேரம் நின்று துணிகளை துவைக்கும் போது, பாதங்களுக்கு நடுவே இரண்டு விரல்களுக்கு நடுவே அரிப்பையும் புண்ணையும் உண்டாக்கும்..
0
Leave a Reply