மருத்துவமனையையே இலவசப் பயிற்சி மையமாக மாற்றிய கோவை மருத்துவர்.
பழங்குடியின இளைஞர்களின் குடிமைப் பணிக் கனவுக்கு உதவும் மனிதநேயம.!கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சுபா மருத்துவமனையை நடத்தி வரும் குழந்தைகள் நல மருத்துவர் என். மகேஸ்வரன், வார இறுதி நாட்களில் மருத்துவமனையின் ஒரு பகுதியை பழங்குடியின மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி மையமாகப் பயன்படுத்தி வருகிறார்.
ஆனைக்கட்டி அருகேயுள்ள கோபனாரி மலைக்கிராமத்திலிருந்து சுமார்40 கி.மீ. பயணித்து வரும்18 இளைஞர்களுக்கு குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார்.
மேலும், மாணவர்களின் பயணச் செலவு, உணவு மற்றும் பாடப்புத்தகங்களையும் இலவசமாக வழங்குகிறார். இதனுடன், மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 30,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட இலவச நூலகத்தையும் நடத்தி வருகிறார்.
0
Leave a Reply