25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாத. 'பீட்ரூட் - சோளமாவு' ஃபேஷியல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாத. 'பீட்ரூட் - சோளமாவு' ஃபேஷியல்

சரும ஆரோக்கியத்தில் பீட்ரூட் அத்தியாவசிய வேர் காய்கறியாகும். அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், மினரல் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் சருமத்தில் அதிசயங்களை ஏற்படுத்தக்கூடும்

தேவையான பொருட்கள்-பீட்ரூட் - 1, சோள மாவு - 2 டீஸ்பூன்; தண்ணீர் - தேவையான அளவு; பாதாம் எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறைமுதலில் பீட்ரூட்டை தோலுரித்து, சிறிய துண்டுகளாக கட் செய்ய வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு ப்யூரி பதத்திற்கு வரும் வரை நன்கு அரைக்க வேண்டும்.பின் அதை கடாய்க்கு மாற்றி, மிதமான நெருப்பில் சூடுபடுத்த வேண்டும்.அத்துடன் சோள மாவை மிக்ஸ் செய்து நன்கு கிளற வேண்டும்.கலவை நன்கு கட்டியாக வருவதற்கு, கூடுதல் சோள மாவும் சேர்த்துக்கொள்ளலாம்கலவையை சில நிமிடங்கள் குறைவான நெருப்பில் வைத்துவிட்டு அடுப்பைஅனைத்து விடலாம். கலவை ஆறியதும் பாதாம் எண்ணெயை செர்த்து நன்கு கலக்க வேண்டும்.பின், கிளாஸ் ஜாருக்கு மாற்றி, பிரிட்ஜில் வைத்து விடலாம்.இந்த ஜில் கலவையை அப்ளை செய்யும் முன்பு, முகத்தை சுத்தமாக வாஷ் செய்ய வேண்டும். பின், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.சுமார்20 நிமிடங்களுக்கு பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். செயற்கை சிகிச்சையில் ஏற்படக்கூடிய வீக்கம், வலி, அலர்ஜி போன்ற எவ்வித பக்கவிளைவுகளும் பீட்ரூட் ஃபேஷியலில் ஏற்படாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News