ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 9-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் தனது 150-வது சர்வதேச போட்டியில் பங்கேற்ற நிலையில், ஒரு பீல்டு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதற்கு 15-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பானின் ஷோடா யமடா கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே வங்கதேசம், சீனா அணிகளை வீழ்த்திய இந்தியா, இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 3 வெற்றிகளைப் பதிவு செய்து 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. மேலும், அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.
0
Leave a Reply