தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2/2அ தேர்வில் 18,829 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 01.11.2026 அன்று நடைபெறவுள்ள தொகுதி2/2அ தேர்வானது காலை 09.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறுவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 35 தேர்வு கூடங்களில் 55 தேர்வு மையங்களில் 18,829 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளார்கள். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 55 கண்காணிப்பு அலுவலர்கள், 06 ஆய்வு அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 16 மொபைல் பார்டியும், துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்களும், 55 தேர்வு மையங்கள் மற்றும் 06 மையக்கட்டுப்பாட்டு அறைக்கு தலா 1 ஒளிப்பதிவாளர்கள் வீதம் 61 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 3,222 தேர்வர்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 12 தேர்வு மையங்களில் 3,257 தேர்வர்களும், இராஜபாளையம் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 3,153 தேர்வர்களும், சாத்தூர் வட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 1,491 தேர்வர்களும், சிவகாசி வட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 2,884 தேர்வர்களும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 2,822 தேர்வர்களும் என மொத்தம் 55 தேர்வு மையங்களில் 18,829 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும். தேர்வு அறைக்கு முன் அறையினுடைய எண்கள் தெளிவாகவும், பெரிதாகவும் ஒட்டப்பட வேண்டும். தேர்வர்கள் காலை 08.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள் வேறு ஏதும் சேதமடைந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ மட்டுமே வேறு விடைத்தாள் கொடுக்கப்பட வேண்டும். நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கப்பட கூடாது. தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது. தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது. தேர்வர்களின் வருகைப் பதிவேட்டை காலை 09.30 க்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply