25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


பொட்டுக்கடலை தேங்காய் பர்பி (Pottukadalai Coconut Burfi).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொட்டுக்கடலை தேங்காய் பர்பி (Pottukadalai Coconut Burfi).

தேவையான பொருட்கள் - 

பொட்டுக்கடலை: 2 கப் (200 கிராம்),

துருவிய தேங்காய் (அல்லது டெசிகேட்டட் கோக்கனட்): 1 கப் (50 - 100 கிராம்),

சர்க்கரை: 1 கப் (150 கிராம்),

ஏலக்காய் தூள்: 3 ஏலக்காய் (பொடித்தது),

நெய்: 1 முதல் 3 ஸ்பூன்,

முந்திரி, பாதாம்: சிறிதளவு (பொடியாக நறுக்கியது),

காய்ச்சி ஆற வைத்த பால்: கால் கப் (தேவைப்பட்டால்).

 

செய்முறை - 

முதலில் எடுத்து வைத்துள்ள பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அதன்பிறகு கட்டிகள் ஏதுமின்றி இருக்க அந்த மாவை நன்றாகச் சலித்து தனியாக எடுத்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எடுத்து வைத்துள்ள சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சிக் கொள்ளவும். (அல்லது சர்க்கரை கரைந்து லேசான பாகு பதம் வர வேண்டும்).

மற்றொரு வாணலியில் 1 ஸ்பூன் நெய்விட்டு, வறுத்த தேங்காய் துருவல் அல்லது டெசிகேட்டட் கோக்கனட்டை சேர்த்து லேசாக வதக்கவும்.

அதில் சலக்கிய பொட்டுக்கடலை மாவு, ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கிளறவும்.

இதனுடன் தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகு அல்லது காய்ச்சி ஆற வைத்த பாலைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி விடவும்.

கலவை கெட்டியாகி வந்தவுடன், நெய் தடவிய தட்டில் இதைக் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.

லேசாக ஆறியவுடன் உங்களுக்கு விரும்பிய வடிவில் (சதுரமாக) துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

சுவையான மற்றும்வாயில் கரையும் பொட்டுக்கடலை தேங்காய் பர்பி தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News