25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சருமம் மென்மையாக கோதுமை மாவு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சருமம் மென்மையாக கோதுமை மாவு .

சரும சுத்தம் மற்றும் பொலிவுக்கு கோதுமை மாவு, இயற்கையான ‘எக்ஸ்ஃபோலியேட்டராக’ செயல்பட்டு, முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் கலவைகளை நீக்குகிறது. இதனால், முகம் ஜொலிக்கத் தொடங்கும்.முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தும்தொடர்ந்து பயன்படுத்தும்போது, கோதுமை மாவு முடி வேர்களை மெதுவாக பலவீனமாக்கி, அவற்றின் வளர்ச்சியை குறைக்கும். குறிப்பாக முகத்தில் உள்ள சிறு முடிகளை அகற்றுவதற்கு இது பயனாகிறது.

பயன்பாட்டு முறைகள்:

பேஸ்ட் 1: கோதுமை + தயிர்/பால் + மஞ்சள்

தேவைப்படும் பொருட்கள்:

 கோதுமை மாவு – 2 ஸ்பூன்

 தயிர் அல்லது பால் – 1 ஸ்பூன்

 மஞ்சள் தூள் – சிறிதளவு

 செய்முறை:

எல்லாவற்றையும் கலந்து விழுதாக செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் காய வைக்கவும். பின்னர் நனைந்த கைகளால் மெதுவாக துடைக்கவும்.

 பேஸ்ட் 2: கோதுமை + தேன்

முடி வளரும் இடங்களில் தடவி, 20 நிமிடங்கள் காய வைக்கவும். பிறகு கீழிருந்து மேலாக மெதுவாக பிடுங்கி எடுக்கவும்.

 ஸ்கிரப்: கோதுமை + கடலை மாவு + தயிர்/பால்

இதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் செய்து கழுவவும். இதுவும் பொலிவை கூட்டும்.

 இந்த செய்முறைகள் வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தப்படும்போது, நல்ல முடிவுகளை காணலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News