25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Nov 19, 2022

திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்குக் குறள் பரிசு விண்ணப்பங்கள்

மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்து  அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால்  குறள் பரிசாக ரூ.10000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ஆம் ஆண்டுக்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ. 10000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும். விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ / www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை     23.12.2022க்குள் “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ/ tamilvalar.vnr@tn.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ  அனுப்புமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 12, 2022

பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை , நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 12.11.2022 இரண்டாவது சனிக்கிழமை அன்று, அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் இக்குறைதீர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.ரவிகுமார் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்;

Nov 12, 2022

பாரத பிரதமரின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில்  பாரத பிரதமரின் திருந்திய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்   நடப்பு 2022-2023 ரபி பருவ பயறு வகை பயறுகள் பயிர் காப்பீடு செய்வதற்கு 15.11.2022 கடைசி தினமாகும். இதை கருத்தில்கொண்டு 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரு  தினங்கள் அரசு விடுமுறை தினத்தில் பயிர் காப்பீட்டு பணிக்காக வங்கிகள் மற்றும் விருதுநகர்  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள், இ-சேவை மையங்கள் அனைத்தும் விவசாயிகளின் நலனுக்காக  பயிர் காப்பீடு பதிவு செய்யும் பணிக்காக  மட்டும் செயல்படும்  என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S.,  அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Nov 09, 2022

குழந்தைகளை கண்மாய்கள், குளங்கள், ஓடைகள்,ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம்

  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 01.10.2022 முதல் தொடங்கியுள்ளது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளதால் கடந்த 1 மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ள கண்மாய், குளம், குட்டைகள்; முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளது. இந்த நேரத்தில் வடகிழக்கு பருவ மழையினால் மிகவும் பாதிக்கப்பட்டக்கூடிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையினால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசர கட்டுபாட்டு அறை 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24  மணிநேரமும்  தகவல் தெரிவிக்கலாம்.  07.11.2022 ம் தேதி அருப்புக்கோட்டை வட்டம், பாளையம்பட்டி கிராமம், பாலையம் பட்டி மேலத்தெருவினைச் சேர்ந்த சரத்குமார் என்பவரின் குழந்தைகள் சித்தார்த் (வயது 8) மற்றும் சந்திரமணி (வயது 10) ஆகியோர் மேற்படி ஊரிலுள்ள ஊரணியில் குளிக்க சென்றபொழுது தவறி விழுந்ததில் இறந்து விட்டனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய், குளம் மற்றும் குட்டைகள்; முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளதால் குளிப்பதற்கு செல்ல வேண்டாம் எனவும், தங்கள் குழந்தைகளை கண்மாய்கள், குளங்கள், ஓடைகள்,ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,I A S அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Nov 05, 2022

விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில் 17.10.2022 முதல் 27.10.2022 வரை புத்தகத் திருவிழா-2022 நடைபெறவுள்ளது

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பினை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.அதனடிப்படையில், விருதுநகரில் முதல்முறையாக  மாவட்ட நிர்வாகமும்,  தமிழ்நாட்டின் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து,  விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 17.11.2022  முதல் 27.11.2022 வரை மாபெரும் புத்தக திருவிழா நடைபெற இருக்கிறது.இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக 100-க்கும் மேற்ப்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன.  இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள்;, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.அந்த வகையில், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S, அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.

Nov 02, 2022

இராஜபாளையத்தில் சாலைபராமரிப்பு பணியை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்.

இராஜபாளையம் மெயின் ரோட்டில் மேம்பாட்டு பணிகளால், ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. எனவே இன்று (நவம்பர் 2) முதல் நகரின் வடக்கு பகுதியில் இருந்து வரும் கார் மற்றும் பயணிகள் பஸ் மட்டும் ,நேரு சிலை சந்திப்பில் திரும்பி, டி.பி.மில்ஸ் ரோடு வழியாக ,காமராஜர் நகர் ரோடு அடைந்து  பஸ் ஸ்டாண்டிற்கும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும், காந்தி சிலை ரவுண்டானா வழியாகவும் செல்ல வேண்டும். மேற்கிலிருந்து வரும் பஸ் காந்திசிலை, முடங்கியார் ரோடு, தாலுகா அலுவலகம், நேரு சிலை, டி.பி. மில்ஸ் வழியே பழைய பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும். தெற்கிலிருந்து வரும் கனரக வாகனங்கள் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் சிலை, சங்கரன்கோவில் முக்கு, முதுகுடி, எஸ். ராமலிங்காபுரம், வன்னியம்பட்டி வழியே ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் சரக்கு, கனரக வாகனங்கள் இராஜபாளையம் நகரில் நுழைய அனுமதி இல்லை. வன்னியம்பட்டி, அட்டை மில் முக்கு ரோடு வழியே செல்ல வேண்டும். இராஜபாளையம் நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற உள்ள சாலை பராமரிப்பு பணியை முன்னிட்டு நவம்பர் 2 முதல் 13 வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி. ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

Oct 26, 2022

டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு தினமான 27.10.2022 அன்று ஒருநாள் மட்டும் தற்காலிமாக மூடப்படுகிறது

விருதுநகர் மாவட்டத்தில்  செயல்பட்டுவரும் F.L-1,  F.L-2, F.L-3,  F.L-3A, FL-3AA  மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,  1981-ன்படி, மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு தினமான 27.10.2022 அன்று ஒரு மட்டும் தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1), F.L-2, F.L-3,  F.L-3A,  FL-3AA மற்றும் FL-11  மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,  1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்

Oct 17, 2022

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 18.10.2022 அன்று நடைபெற உள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 18.10.2022 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 07, 2022

விருதுநகர் மாவட்டம் டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் நபிகள் நாயகம் பிறந்த தினம் அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது

விருதுநகர் மாவட்டத்தில்  செயல்பட்டுவரும்  F.L-1,  F.L-2, F.L-3,  F.L-3A, FL-3AA மற்றும் FL-11  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981 -ன்படி, நபிகள் நாயகம் பிறந்த தினமான 09.10.2022 அன்று ஒரு மட்டும் தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1), F.L-2, F.L-3,  F.L-3A,  FL-3AA  மற்றும் FL-11  மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார். 

Oct 01, 2022

காந்தி ஜெயந்தி தினமான 02.10.2022 அன்று ஒரு நாள் மட்டும் மதுபான சில்லறை விற்பனை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும்  F.L-1,  F.L-2, F.L-3,  F.L-3A,  FL-3AA மற்றும் FL-11  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,  1981-ன்படி, காந்தி ஜெயந்தி தினமான 02.10.2022 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் F.L-1,  F.L-2, F.L-3,  F.L-3A,  FL-3AA மற்றும் FL-11   மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டிIAS. அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 11 12 13 14 15 16 17 18 19 20

AD's



More News